ஜெர்மியாசு பெஞ்சமின் ரிச்டர்

From Wikipedia, the free encyclopedia

ஜெர்மியாசு பெஞ்சமின் ரிச்டர்
Remove ads

ஜெர்மியாஸ் பெஞ்சமின் ரிச்டர் (Jeremias Benjamin Richter; இடாய்ச்சு: [ˈʁɪçtɐ]; 10 மார்ச் 1762 – 4 மே 1807)[1] ஒரு செருமானிய வேதியியலாளர் . இவர் சிலேசியாவில் உள்ள ஹிர்ஷ்பெர்க்கில் பிறந்தார். 1794 ஆம் ஆண்டில் பிரெசிலாவில் ஒரு சுரங்க அதிகாரி ஆனார். மேலும் 1800 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள அரச பீங்கான் தொழிற்சாலைக்கு சுரங்கத் துறையின் மதிப்பீட்டாளராகவும், வேதியியலாளராகவும் நியமிக்கப்பட்டார், பணிபுரிந்த இடத்திலேயே இவர் இறந்தார். விகிதவியல் (Stoichiometry) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஜெர்மியாஸ் பெஞ்சமின் ரிச்டர், பிறப்பு ...
Remove ads

தரம்பார்த்தலை மேம்படுத்தியவர்

அமிலங்கள், காரங்களை நிறைவு செய்வது அல்லது காரங்கள் அமிலங்களை நிறைவு செய்வது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடையினடிப்படையில் அவற்றின் அளவை அளந்தறியும் சில தொடக்க கால முறைகளைக் கண்டறிந்தார். ஒரு குறிப்பிட்ட அமிலத்தின் அதே அளவை நிறைவுசெய்யக்கூடிய வெவ்வேறு காரங்களின் அளவுகள் ஒன்றுக்கொன்று சமமானவை என்பதை அவர் உணர்ந்தார். (பார்க்க தரம் பார்த்தல் ).

வேதியியல் என்பது பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு பிரிவாகும் என்ற முடிவுக்கு அவர் வழிவகுத்தார். மேலும், கொடுக்கப்பட்ட அமிலத்தை நிறைவு செய்யத் தேவையான வெவ்வேறு காரங்களின் அளவுகள் ஒரு எண்கணித கூட்டுத்தொடரை உருவாக்குகின்றன, மேலும் கொடுக்கப்பட்ட காரத்தை நிறைவு செய்யும் அமிலங்களின் அளவுகள் ஒரு பெருக்குத்தொடர் விதியைக் கட்டமைக்க முயற்சிக்கின்றன.

Remove ads

மாறா விகித விதி

வேதிவினையில் நுகரப்படும் சேர்மங்களின் எடையின் விகிதம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதை ரிச்டர் கண்டறிந்தார். எடுத்துக்காட்டாக, சல்பூரிக் அமிலத்தின் எடையால் 1000 பாகங்களை நடுநிலையாக்க, மெக்னீசியாவின் (MgO) எடையில் 615 பாகங்கள் தேவைப்பட்டன. அவரது தரவுகளிலிருந்து, எர்ன்ஸ்ட் காட்ஃபிரைட் பிஷர் 1802 ஆம் ஆண்டில் 1000 பாகங்களுடைய சல்பூரிக் அமிலத்தை தரநிலையாக எடுத்து, வேதிச் சமன்பாட்டின்[2] அட்டவணையைக் கணக்கிட்டார். வேதிச்சேர்மங்களின் நிலையான இயைபு குறித்து ஜோசப் ப்ரூஸ்ட் தனது பணியை அறிக்கையாக அளித்தபோது, அணுக் கோட்பாட்டை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான நேரம் கனிந்தது. அறுதி விகித சம விதி (அ) மாறா விகித விதி மற்றும் திட்ட இயைபு விதியானது அணுக்கள் இருப்பதை நிரூபிக்கவில்லை, மாறாக அணுக்கள் நிலையான விகிதாச்சாரத்தில் சேரும்போது வேதிச்சேர்மங்கள் உருவாகின்றன என்று கருதாமல் அவற்றை விளக்குவது கடினம்.

Remove ads

வெளியீடுகள்

இவரது முடிவுகள் உரிய அங்கீகாரம் அல்லது பாராட்டைப் பெறுவதற்கு முன்னதாகவே, விகிதவியல் அல்லது வேதியியல் கூறுகளை அளவிடுவதற்கான கலை (Der Stochiometrie oder Messkunst chemischer Elemente) (1792-1794), மற்றும் வேதியியலில் சமீபத்திய பாடங்கள் (Über die neueren Gegenstände in der Chemie) (1792-1802) ஆகியவற்றில் வெளியிடப்பட்டன. இதற்குக் காரணம், அவருடைய சில பணிகள் கார்ல் வென்சலுக்கு ஜோன்ஸ் பெர்சிலியசால் தவறாகக் கூறப்பட்டது. இது 1841 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வேதியியல் பேராசிரியரும், மாறா வெப்ப அடக்கக் கூடுதல் விதியின் ஆசிரியருமான கெர்மான் இவானொவிச் கெசு என்பவரால் திருத்தப்பட்டது.

பிந்தைய காலப்பணி

1792 மற்றும் 1794 க்கு இடையில் இவர் மாறா விகித விதி தொடர்பான தனது பணிகளின் சுருக்கத்தை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இந்த புத்தகத்தில் ரிச்டர் விகிதவியல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார், அதை இவர் வேதியியல் அளவீடுகளின் கலை என்று வரையறுத்தார். வேதிச்சேர்மங்களை உருவாக்குவதற்கு எந்த பொருட்கள் ஒன்றிணைகின்றன என்பதைப் பொறுத்து விதிகளைக் கையாள வேண்டும் என்றும் கூறினார்.

ரிச்டர் வேதியியலில் கணிதத்தின் பங்கால் ஈர்க்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவரது எழுத்து நடை தெளிவற்றதாகவும் விகாரமானதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. அட்டவணைகளின் அடிப்படையில் எர்ன்ஸ்ட் காட்ஃபிரைட் பிசர் என்பவரால் சுருக்கப்பட்ட வடிவத்திற்கு வந்த 1802 ஆம் ஆண்டு வரை அவரது பணி சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது எனலாம்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads