விராத்ஸ்சாஃப்

நகரம், போலந்து From Wikipedia, the free encyclopedia

விராத்ஸ்சாஃப்
Remove ads

விராத்ஸ்சாஃப் (Wrocław, /[invalid input: 'icon']ˈvrɒtswəf/; German: Breslau [ˈbʁɛslaʊ̯]  ( கேட்க)), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியாவில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும்.

விரைவான உண்மைகள் விராத்ஸ்சாஃப், நாடு ...
விரைவான உண்மைகள் விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம், வகை ...

வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.

யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டிற்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.

Remove ads

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads