ஜெ. சத்திஷ் குமார்
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெ. சதீஷ்குமார் (J. Satish Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்ப தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார்.[1][2][3]
தொழில்
ஜே சதீஷ் குமார் ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் என்ற பதாகையின் கீழ் பல படங்களில் தயாரித்ததுள்ளார். குறிப்பாக தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, குற்றம் கடிதல், தரமணி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.[4][5][6] பரதேசி போன்ற படங்களை அதே பதாகையின் கீழ விநியோகித்துள்ளார்.[4] தரமணி படத்தில் இவர் கவுரவத் தோற்றத்தில் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பேரன்பு படத்திலும் நடித்தார்.[7] மேலும் இவர் அக்னிச் சிறகுகள் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில், படத்தின் பெரும்பகுதியில் தோன்றும்வகையில் நடிக்கவுள்ளார்.[4][7] காவலுடாரி என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமாக தமிழ் மற்றும் தெலுங்கில் கபடதாரி என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்கிறார்.[4][7] தயாரிப்பு நிலையில் உள்ள பிரட்ன்சிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கின் நண்பராக நடிக்கிறார்.[8] பிந்து மாதவி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் இவர் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.[4]
Remove ads
திரைப்படவியல்
நடிகராக
- குறிப்பில் ஏதும் குறிப்படபடாத, எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
விருதுகளும், பரிந்துரைகளும்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads