சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Film Award for Best Feature Film in Tamil) ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது.
டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. "சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்", "இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", "மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.
Remove ads
விருதுபெற்ற தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads