ஞானப்பிரகாச சுவாமிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ஆம் நூற்றாண்டில்[1] வாழ்ந்த புலவர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். சிதம்பரத்தில் வாந்தவர். சமற்கிருதத்திலும், தமிழிலும் பெரும் புலமை பெற்றவர். பல நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இவரது மரபில் பிறந்தவர் ஆவார்.[2]
போர்த்துக்கீசர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் ஒவ்வொருவரும் போர்த்துக்கீச ஆட்சியாளருக்கு ஒவ்வொரு நாளும், ஒரு பசுவைக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். "பசுவைக் கொல்லுதலால் தமக்குப் பாவம் வந்தெய்தும்" எனப் பயந்து இரவோடிரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சிதம்பரத்துக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் தங்கிய பின்னர், வங்காளம் (கௌட தேசம்) சென்றார். அங்கு வடமொழி பயின்ற பின் தமிழகம் திரும்பி வந்து திருவண்ணாமலை ஆதீனத்தில் சந்நியாசம் பெற்றார்.[2]
திருவண்ணாமலையில் இருந்து பின்னர் சிதம்பரம் வந்தார். இங்கு அவர் பௌஷ்கர ஆகம விருத்தி, சிவஞானபோத விருத்தி ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோக ரத்னம், சிவாகமாதி மாகான்மிய சங்கிரகம் போன்ற நூல்களை சமற்கிருதத்திலும், சிவஞான சித்தியார் உரை என்ற நூலைத் தமிழிலும் எழுதினார்.[2]
ஞானப்பிரகாச சுவாமிகள் சிதம்பரத்தில் ஞானப்பிரகாசம் என்னும் குளத்தினை வெட்டிக் கட்டுவித்தார். சிதம்பரத்திலேயே இவர் காலமானார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads