டன்கிர்க் சண்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டன்கிர்க் சண்டை (Battle of Dunkirk) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 26 - ஜூன் 4, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து டன்கிர்க் துறைமுகத்தைக் கைப்பற்றின.
ஜெர்மானியப் படைகள் மே 10 ஆம் தேதி பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளை பெல்ஜியத்தில் பொறி வைத்துப் பிடிப்பது ஜெர்மானியத் திட்டம். இத்திட்டம் வெற்றியடைந்து ஜெர்மானியப் படைகள் மே 21ம் தேதி ஆங்கிலக் கால்வாயை அடைந்தன. இதனால் நேச நாட்டுப் படைகள் வடமேற்கு பிரான்சின் ஒரு சிறு பகுதியில் சுற்று வளைக்கப்பட்டன. ஜெர்மானிய படைவளையம் மெல்ல இறுகி இறுதியில் டன்கிர்க் துறைமுகம் மட்டும் நேசநாட்டுப் படைகள் வசமிருந்ததது. டன்கிர்க்கின் மீது ஜெர்மானிய வான்படை மற்றும் தரைப்படைத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே ஆங்கிலக் கால்வாய் வழியாக நேச நாட்டுப் படைகள் இங்கிலாந்துக்குத் தப்பத் தொடங்கின. மே 26 ம் தேதி தாக்குதலைத் தொடங்கிய ஜெர்மானியர்களால் ஜூன் 4 ம் தேதி தான் டன்கிர்க்கைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் அதற்குள் சிக்கியிருந்த சுமார் 4,00,000 வீரர்களில் 3,38,226 பேர் இங்கிலாந்துக்குத் தப்பி விட்டனர். சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே ஜெர்மானியர்களிடம் சிக்கினர். டன்கிர்க் துறைமுகத்தின் வீழ்ச்சியுடன் பிரான்சு சண்டையின் முதல் கட்டம் முடிவடைந்தது. நேச நாட்டுப் படைகளின் தோல்வியினால் பிரான்சு சரணடைவது தவிர்க்க முடியாமல் போனது. கீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானியர்களுக்கு இச்சண்டை வெற்றியளித்தாலும், மேல்நிலை உத்தியளவில் பெருந்தோல்வியே. ஏனெனில் தப்பிய நேச நாட்டுப்படைகள் இங்கிலாந்தில் மீண்டும் ஆயத்தம் செய்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீது படையெடுத்தனர்
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads