டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் (திரைப்படம்)
Remove ads

முனைவர். பாபாசாகிப் அம்பேத்கர் (ஆங்கிலம்:Dr. Babasaheb Ambedkar) இது டிசம்பர் 15, 2000 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும்.[1] இத் திரைப்படம் இந்திய நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்ட, அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஆவணத் திரைப்படமாகும். இயக்குநர் ஜப்பார் பட்டேல் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி அம்பேத்கராக நடித்துள்ளார். இத் திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் Dr. Babasaheb Ambedkar, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

வெளியீடு

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு தயாரன போதிலும், இது டிசம்பர் 15 , 2000 ஆம் ஆண்டு அன்று வணிகரீதியாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பின்பு இப்படம் ஒன்பது இந்திய மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதர்க்கு தமிழக அரசு சார்பாக பத்து லட்சம் நிதியுதவியை படத்தின் தயாரிப்பாளரிடம் வழங்கப்பட்டது.[3] ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் தமிழகத்தில் பத்து ஆண்டுக்குப்பின் டிசம்பர் 3 , 2010 அன்று தான் தமிழில் வெளிவந்தது.[4]

Remove ads

ஆக்கச் செலவுகள்

இத் திரைப்படத்திற்கு “சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்” மற்றும் மகாராஷ்டிரா அரசு இணைந்து நிதி உதவியுடன், இந்திய அரசுக்குச் சொந்தமான தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் தயாரித்து நிர்வகிக்கப்பட்டது. இப்படத்திற்கு மொத்தம் 8.95 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.[5]

நடிகர்கள்

விருதுகள்

இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டின் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது-:[6]

ஆதாரங்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads