டாண்டியா ராஸ்

From Wikipedia, the free encyclopedia

டாண்டியா ராஸ்
Remove ads

ராஸ் (Raas) அல்லது டாண்டியா ராஸ் (Dandiya Raas) என்பது சமூக–மத உறவு கொண்ட நாட்டுப்புற நடனம் ஆகும். இது இந்தியாவில் உள்ள குசராத்து மாநிலத்தில் தோன்றியதாகும். முக்கியமாக நவராத்திரி நாட்களில் ஆடப்படும்.[1][2] இந்த நடனம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மார்வார் பகுதியிலும் கூட ஆடப்படுகிறது.[3]

Thumb
பெங்களூரில் நவராத்திரி விழாவில் டான்டியா ராஸ் நடனம்
Thumb
டாண்டியா
Thumb
சௌராட்டியரின் டாண்டியா ராசு நடனம்

சொற்பிறப்பியல்

ராஸ் என்ற சொல் சமற்கிருதத்தில் உள்ள “ரசா” என்ற சொல்லில் இருந்து உருவானது. இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளோடு தொடர்புடைய ஒரு சொல். கபிலா வாத்ஸ்யாயன் தெய்வீக வார்த்தை என்பது இந்திய கலைகளின் ஒற்றுமைக்கு ஒரு அடிப்படை என்று வாதாடுகிறார்.[4]

ராசின் கலை வடிவங்கள்

டாண்டியா ராஸ், கோப்குந்தன் சொலாங்க ராஸ் மற்றும் மேர் டாண்டியா ராஸ் போன்றவைகள் ராஸ் நடனத்தின் பொதுவான கலை வடிவங்கள் ஆகும். சௌராட்டிராவில் ராஸ் என்பது ஆடவர்களால் ஆடப்படுவது, பெண்கள் ஆடுவது ராஸ்டா என்று அழைக்கப்படுகிறது. ராஸ் வடிவத்தில் நடனக் கூறுநிலை முக்கிய பங்கு வகிக்கும், ஆனால் ராஸ்டா வடிவத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கும்.[2]

வடிவமைப்பு

ஆண்களும் பெண்களும் டாண்டியா ராஸ் நடனத்தை பாரம்பரிய முறையில் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுவார்கள், எனவே இந்த நடனக் குழுவில் இரட்டைப்படையில்தான் குழுவினரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பொதுவாக இரண்டு வரிசையில் கலைஞர்கள் ஒருவரை ஒருவரின் முகம் பார்த்து நின்று ஆடுவார்கள்.

பொதுவாக இந்த வரிசையானது கடிகாரமுள் திசையில் இயங்கும் ஒவ்வொருவரும் தன் இணையாயிருப்பவரின் கையில் உள்ள கோலை அடிப்பதற்காக ஒரு அடி முன் வைப்பார் பிறகு இரண்டாம் நபரை நோக்கி செல்வார். வரிசையின் கடைசியில் ஒவ்வொருவரும் திரும்பி தங்களுக்கு எதிராக உள்ள வரிசையில் இணைந்து கொள்வார் எனவே இந்த நடன இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இங்கு இசை மிக மெதுவாக தொடங்கும். இந்த இசையானது எட்டு முறை அடிக்கும் இசை சுழற்சி கஹெர்வா என்று அழைக்கப் படுகிறது இது கீழ் கண்ட முறையில் இசைக்கப் பட்டு நடனம் ஆடப் படுகிறது. முதல் அடியில் கலைஞர்கள் தங்கள் வலப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை அடித்து பின்னர் வலப்பக்கம் திரும்பி தங்கள் இணையின் கோலை அடிப்பார்கள் பின்னர் தங்களின் இடப்பக்கம் கோலில் மறுபடியும் அடிப்பார்கள். மறுபடியும் அனைவரும் இடப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை தாங்களே அடித்து பின் திரும்பி தங்கள் இணையின் வலப்பக்க கோலை மறுபடியும் அடிப்பார்கள் பின்னர் புதிய இணையுடன் சேருவதற்கு முன்பாக இரண்டு முறை இடம் மாறுவார்கள்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads