டாமன்சாரா சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாமன்சாரா சாலை (மலாய்; ஆங்கிலம்: Jalan Damansara; சீனம்: 白沙罗路 என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1- இல் உள்ள மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான மாற்றுச் சாலையுடன் சிகாம்புட் நகர்ப் பகுதிகளை இணைக்கிறது.
கோலாலம்பூர் மாநகரத்தின் பழைமையான சாலைகளில் ஒன்றான டாமன்சாரா சாலை, தற்போது பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சாரா பிரிவுகளுக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான இணைப்புச் சாலையாகச் செயல்படுகிறது.
Remove ads
பெயர்
கிள்ளான் ஆற்றுப் படுகையில் டாமன்சாரா ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய துறைமுகக் குடியேற்றத்தின் பெயரால் டாமன்சாரா சாலைக்குப் பெயரிடப்பட்டது.[1]
டாமன்சாரா என்ற பெயர் ஓர் இந்தியப் பெயராக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. இந்தி மொழியில், டாமன் என்றால் "மலையடிவாரம்" என்றும்; சாரா என்றால் "செல்வ மாளிகை" அல்லது சமசுகிருதத்தில் "நீர்" என்றும் பொருள்படும்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads