டிமிடர்

From Wikipedia, the free encyclopedia

டிமிடர்
Remove ads

டிமிடர் என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் செரெசு என்பவர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் டிமிடர், வேறு பெயர்கள் ...
Remove ads

டிமிடர் மற்றும் பெர்சிஃபோன்

பெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான். இதனால் டிமிடர் மனமுடைந்தார். இதனால் பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்றது.[2] அழிவில் இருந்து உலகைக் காப்பாற்ற சியுசு ஏடிசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எர்மெசு கடவுளைப் பாதாள உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறார். பிறகு ஒரு உடன்படிக்கை செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை காலத்தில் மட்டும் பாதாள உலகில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

Remove ads

டிமிடர் மற்றும் பொசைடன்

டிமிடர் மேல் பொசைடன் கடவுள் காமம் கொண்டார். இதனை அறிந்த டிமிடர் பெண் குதிரை வடிவமெடுத்து குதிரை மந்தையில் ஒளிந்து கொண்டார். ஆனால் பொசைடன் ஆண் குதிரை வடிவமெடுத்து டிமிடரை துரத்தி அவருடன் வலுக்கட்டாயமாக உறவாடினார். இதனால் டிமிடர் கோபமடைந்தார். இந்த நிலையில் டிமிடர் எரினைசு என அழைக்கப்படுகிறார். பிறகு லாடோன் நதியில் புனித நீராடியபோது டிமிடரின் கோபம் அடங்கியது. இந்த நிலையில் இவர் டிமிடர் லூசியா அல்லது நீராடிய டிமிடர் என்று அழைக்கப்படுகிறார்.[3] பொசைடன் மூலம் டிமிடருக்கு ஏரியன் என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads