ஏடிசு
கிரேக்க கடவுள் (எமன்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹேட்ஸ் (Hades, /ˈheɪdiːz/; பண்டைக் கிரேக்கம்: ᾍδης அல்லது Άͅδης, ஆய்டேஸ்) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பாதாள கடவுள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் புளூட்டோ ஆவார். இவருக்கு இணையானா இந்து கடவுள் யமன். இவர் மரணித்தவர்கள், பணக்காரர்கள் போன்றோரின் கடவுள் ஆவார். இவரது பாதாள உலகின் வாயிலில் செர்பெரசு எனும் நாய் காணப்படுகின்றது. இது பாதாள உலகத்தினுள் எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாக்கின்றது. குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மூத்த மகன் ஹேட்ஸ். டைட்டன்களை வீழ்த்திய பிறகு சியுஸ் தன் சகோதரர்களான பொசைடன் மற்றும் ஹேட்ஸ் ஆகியோருடன் உலகைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி வானம் சியுஸ்கும் கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஹேட்ஸ்க்கும் கிடைத்தது.
Remove ads
ஹேட்ஸ் மற்றும் பெர்சிஃபோன்

டிமிடரின் மகளான பெர்சிஃபோன் ஹேட்ஸ்ன் மனைவி ஆவார். ஒருநாள் பெர்சிஃபோன் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது அவள் அழகில் மயங்கிய ஹேட்ஸ் அவளை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றான். இதனால் விவசாயக் கடவுளான டிமிடர் வருந்தினார். அதன் காரணமாக பூமியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண எண்ணிய சியுஸ், தூது கடவுளான ஹெர்மிஸ் பாதாள உலகிற்குச் சென்று சமாதானம் பேசுமாறு கூறினார். ஹேட்ஸ் பெர்சிஃபோனை விடுவிக்க சம்மதித்தான். ஆனால் அவள் பாதாள மாதுளைப்பழத்தை உண்டுவிட்டதால் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் மட்டும் அவள் ஹேட்ஸ் உடன் பாதாள உலகில் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பயிர்கள் வாடும் கோடைக்காலம் அல்லது குளிரினால் வீணாகும் குளிர்காலம் போன்ற காலங்களில் பெர்சிஃபோன் பாதாள உலகில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Remove ads
மேலும்
ஸ்டைஸ் நதியை கடந்தே பாதாள உலகம் செல்லவேண்டும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads