டியேகோ கொஸ்டா

From Wikipedia, the free encyclopedia

டியேகோ கொஸ்டா
Remove ads

டியேகோ ட சில்வா கொஸ்டா (Diego da Silva Costa,எசுப்பானியம்: [ˈdjeɣo ða ˈsilβa ˈkosta], Portuguese: [ˈdʒjeɡu dɐ ˈsiwvɐ ˈkɔstɐ]; பிறப்பு அக்டோபர் 7, 1988)[3][4] தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் அடிப்பானாக எசுப்பானிய காற்பந்துக் கழகமான அத்லெடிகோ மாட்ரிட்டிலும் எசுப்பானிய தேசிய அணியிலும் ஆடுகிறார். இவரது முதன்மை பண்புக்கூறுகளாக உடல்திறம், கோல் அடிப்பது மற்றும் பந்தை தன்வசம் வைத்திருப்பது ஆகியனவென்று விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.[5]>[6] எதிராளிகளுடன் நேரெதிர் மோதல்களில் ஈடுபட்டதாகப் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.[7][8][9]

இது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் சில்வா நபரின் பெயர் கொஸ்டா ஆகும்.
விரைவான உண்மைகள் Personal information, Full name ...

இவர் தன் விளையாட்டு வாழ்வுப் பயணத்தை போர்த்துக்கல்லின் பிராகா விளையாட்டுக் கழகத்திலும் பெனாபீல் காற்பந்துக் கழகத்திலும் துவங்கினார். 2007ஆம் ஆண்டில் அத்லெடிகோ மாட்ரிட் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிருந்து பிராகா, செல்ட்டா விகோ, ஆல்பாசெட் கழகங்களுக்கு ஆட கடனாக அனுப்பப்பட்டார். 2009இல் ரியல் வல்லாடோலிடு கழகத்திற்கு விற்கப்பட்டார். அடுத்த பருவத்தில் மீண்டும் அத்லெடிகோவிற்கு ஆடத் தொடங்கினார்; அவ்வணியில் முதன்மை அணியாளராக 27 கோல்களை அடித்துள்ளார். பின்னர் செல்சீ கழகத்தில் £32 மில்லியனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் தனது முதல் பருவத்திலேயே 21 கோல்கள் அடித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் கூட்டிணைவுக் கோப்பைகளை வெல்ல உதவினார்; 2017இல் செல்சீ மற்றுமொரு கூட்டிணைவு கோப்பை வெல்லவும் முதன்மைப் பங்காற்றினார்.

பன்னாட்டளவில் கொஸ்டா தனது பிறந்த நாடான பிரேசிலுக்கு 2013இல் இருமுறை ஆடியுள்ளார். பின்னர் இவர் எசுப்பானியாவிற்காக ஆட விழைந்தபோது செப்டம்பர் 2013இல் இவருக்கு எசுப்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. எசுப்பானியாவிற்காக முதலில் மார்ச் 2014இல் ஆடினார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் எசுப்பானியாவிற்காக ஆடியுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads