2018 உலகக்கோப்பை காற்பந்து
2018 ஃபிஃபா உலகக்கோப்பை காற்பந்து முன்னோட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2018 பீஃபா உலகக்கோப்பை (2018 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 21 வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி உருசியாவில் சூன் 14, 2018 முதல் சூலை 15, 2018 வரை நடைபெற்றது.[2] இந்தப் போட்டியை உருசியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
2010 திசம்பர் 2 இல் இப்போட்டிகளை உருசியா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாவது காற்பந்து உலகக்கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இதுவாகும். ஒரு ஆட்டம் தவிர ஏனையவை உருசியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெற்றன.[3][4][5] உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி உதவி நடுவர்கள் பணியாற்றினார்கள்.[6]
இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன. உருசியா போட்டிகளை நடத்தும் நாடாகத் தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றன. உருசியாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெற்றன.[7][8][9]
நடப்பு உலகக்கோப்பை வாகையாளர் செருமனி குழுநிலை ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேறியது. 1938 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக செருமனி அணி இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறவில்லை.[10] கடந்த ஐந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் நடப்பு வாகையாளர்கள் இவ்வாறு குழுநிலை ஆட்டத்திலேயே வெளியேறியது இது நான்காவது முறையாகும். முன்னதாக பிரான்சு 2002 இலும், இத்தாலி 2010 இலும், எசுப்பானியா 2014 இலும் வெளியேறின.[11] பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்ட எசுப்பானியா, போர்த்துகல், அர்கெந்தீனா அணிகள்[12] 16-அணிகளின் சுற்றின் முடிவில் வெளியேற்றப்பட்டன. பலம் குன்றியதாகக் கருதப்பட்ட போட்டி நடத்தும் நாடு காலிறுதிக்கு முன்னேறியது. 1934, 1966, 1982, 2006 இற்குப் பின்னர் முதல் தடவையாக காலிறுதிகளில் ஐரோப்பிய அணிகள் மட்டும் விளையாடின.[13][14]
இறுதிப் போட்டி சூலை 15 இல் மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் பிரான்சு, குரோவாசிய அணிகளுக்கிடையே நடைபெற்றது. பிரான்சு 4–2 என்ற கோல் வேறுபாட்டில் வென்று தமது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. அடுத்தடுத்த நான்கு உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரே கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் (இத்தாலி 2006, எசுப்பானியா 2010, செருமனி 2014) கோப்பையை வென்றுள்ளன.
உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற பிரான்சு அணி 2021 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
Remove ads
போட்டி நடத்தும் நாடு தேர்வு



2018, 2022 உலகக் கோப்பைகளை நடத்துவதற்கான நாடுகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் 2009 சனவரியில் ஆரம்பமாயின. இதற்கான விண்ணப்பங்கள் 2009 பெப்ரவரி 2 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[15] ஆரம்பத்தில் ஒன்பது நாடுகள் விண்ணப்பித்திருந்தன, ஆனால் மெக்சிக்கோ பின்னர் விலகிக் கொண்டது.[16] இந்தோனேசியாவின் விண்ணப்பம் அந்நாட்டு அரசின் ஆதரவுக் கடிதம் கிடைக்காததால் 2010 பெப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.[17] ஐரோப்பிய நாடுகளல்லாத ஆத்திரேலியா, சப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பின்னர் படிப்படியாக விலகிக் கொண்டன. இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான தெரிவுகளில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியில் 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து, உருசியா, நெதர்லாந்து/பெல்ஜியம், போர்த்துகல்/எசுப்பானியா ஆகிய நாடுகள் எஞ்சியிருந்தன.
2010 திசம்பர் 2 இல் சூரிக்கு நகரில் 22-உறுப்பினர் கொண்ட பீஃபா பேரவை வாக்களிக்கக் கூடியது.[18] இரண்டாவது கட்ட வாக்களிப்பில் உருசியா 2018 போட்டிகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[19]
வாக்களிப்பு முடிவுகள் வருமாறு:[20]
Remove ads
அணிகள்
தகுதிநிலை
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துத் தகுதியுள்ள நாடுகளும் – 209 உறுப்பு நாடுகள் தகுதிநிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்று நடத்தும் நாடாக, உருசியா தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.[21] சிம்பாப்வே, இந்தோனேசியா ஆகியன தமது முதல் தகுதிகாண் போட்டிகளை விளையாடுவதற்கு முன்னரே தகுதியிழந்தன.[22][23] ஆனால், 2016 மே 13 இல் பீஃபா அமைப்பில் இணைந்த ஜிப்ரால்ட்டர், கொசோவோ ஆகியன தகுதிகாண் சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்பட்டன.[24][25][26] முதலாவது தகுதிகாண் போட்டி கிழக்குத் திமோர், டிலி நகரில் 2015 மார்ச் 12 இல் நடந்தது.[27] இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெறும் நாடுகளை அறிவிக்கும் முக்கிய நிகழ்வு சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் 2015 சூலை 25 இல் நடைபெற்றது.[2][28][29][30]
2018 இறுதிப் போட்டிகளில் பங்குபற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நாடுகளில், 20 நாடுகள் 2014 போட்டியில் பங்குபற்றியிருந்தன. ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதல் தடவையாகப் போட்டியிடுகின்றன.[31] எகிப்து 28 ஆண்டுகளுக்குப் பின்னரும், பெரு 36 ஆண்டுகளுக்குப் பின்னரும் பங்குபற்றுகின்றன. முதல் தடவையாக மூன்று நோர்டிக் நாடுகள் (தென்மார்க்கு, ஐசுலாந்து, சுவீடன்), நான்கு அரபு நாடுகள் (எகிப்து, மொரோக்கோ, சவூதி அரேபியா, துனீசியா) உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன.[32]
நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி (1958 இற்குப் பின்னர் முதல் தடவையாக), மூன்று முறை இரண்டாம் இடத்தை வென்ற நெதர்லாந்து ஆகியன தேர்ந்தெடுக்கப்படாத முக்கிய அணிகள் ஆகும். 2017 ஆப்பிரிக்கக் கோப்பை வெற்றியாளரான கமரூம், இரண்டு தடவை கோப்பா அமெரிக்காவை வென்ற சிலி, மற்றும் நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் தகுதி பெறவில்லை.
|
|
|
![]() உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நாடுகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாத நாடுகள் சுற்றில் இருந்து விலக்கப்பட்ட நாடுகள் பீஃபா அமைப்பில் இல்லாத நாடுகள் |
இறுதிக் குலுக்கல்
இறுதிக் குலுக்கல் 2017 திசம்பர் 1 இல் மாஸ்கோவில் அரச கிரெம்லின் மாளிகையில் இடம்பெற்றது.[33][34] 32 அணிகள் நான்கு அணிகளாக எட்டுக் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதிக் குலுக்கலின் போது, 2017 அக்டோபர் பிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் நான்கு தொட்டிகளில் இடப்பட்டன. முதலாவது தொட்டியில் உருசியா (போட்டியை நடத்தும் நாடு) ஏ1 நிலைக்கும், சிறந்த ஏழு அணிகள் இடம்பெற்றன. இரண்டாம் தொட்டியில் அடுத்த சிறந்த எட்டு அணிகளும், இவ்வாறு 3-ஆம், 4-ஆம் தொட்டிகளும் நிரப்பப்பட்டன.[35] இக்குலுக்கல் முன்னைய போட்டிகளில் இடம்பெற்ற குலுக்கல் முறையை விட வேறுபட்டது.
Remove ads
அரங்குகள்
உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நகரங்களினதும் அரங்குளினதும் இறுதித் தேர்வு 2012 செப்டெம்பர் 29 இல் இடம்பெற்றன. 12 அரங்குகள் தெரிவாகின. இவற்றுள் லூசினிக்கி, எக்கத்தரீன்பூர்க், சோச்சி ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் புனரமைக்கப்பட்டன. ஏனைய 9 அரங்குகளும் புதிதாக அமைக்கப்பட்டன. $11.8 பில்லியன் இதற்காக செலவழிக்கப்பட்டது.[36]
12 அரங்குகளில், உருசியாவின் மிகப் பெரிய இரண்டு அரங்குகள் (லூசினிக்கி, சென் பீட்டர்சுபர்க் அரங்கு ஆகியன) ஒவ்வொன்றிலும் 7 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. சோச்சி, கசான், நீசுனி நோவ்கோரத், சமாரா ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் (ஒரு காலிறுதி ஆட்டம் உட்பட) ஆறு ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. மாஸ்கோவின் அத்கிறீத்தியே அரங்கு, ரசுதோவ்-நா-தனு ஆகியன ஒவ்வொன்றிலும் (ஒரு 16-ஆம் சுற்று ஆட்டம் உட்பட) 5 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. வோல்கோகிராத், கலினின்கிராத், எக்கத்தரீன்பூர்க், சரான்சுக் ஆகியன ஒவ்வொன்றிலும் 4 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.
கால அட்டவணை
முழுமையான கால அட்டவணை 2015 சூலை 24 இல் அறிவிக்கப்பட்டது.[37][38] உருசியா குழு நிலையில் ஏ1 நிலைக்கு வைக்கப்பட்டது. சுற்றின் முதலாவது போட்டியில் உருசியா சவூதி அரேபியாவுடன் சூன் 14 இல் மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் விளையாடவுள்ளது.[39] லூசினிக்கி அரங்கில் சூலை 11 இல் இரண்டாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 15 இல் இறுதி ஆட்டமும் இடம்பெறுகின்றன. சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கிரெஸ்தோவ்சுக்கி அரங்கில் சூலை 10 இல் முதலாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 14 இல் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் இடம்பெறும்.[25]
Remove ads
நடுவர்கள்

பீஃபா உலகக்கோப்பை ஒன்றில் முதற்தடவையாக நிகழ்படக் கண்காணிப்பு நடுவர்கள் இம்முறை அனுமதிக்கப்பட்டாரக்ள்.[40]
2018 மார்ச் 29 இல், பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு 2018 உலகக்கோப்பைக்கு 36 நடுவர்கள் மற்றும் 63 உதவி நடுவர்கள் பட்டியலை அறிவித்தது.[41] 2018 ஏப்ரல் 30 இல், 13 நிகழ்பட நடுவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.[42] 2018 மே 30 இல், சவூதி அரேபிய நடுவர் பகாத் அல்-மிர்தாசி ஆட்டமுடிவை முன்கூட்டியே நிர்ணயித்த குற்றச்சாட்டில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.[43] கென்யாவின் உதவி நடுவர் மார்வா ராஞ்சி என்பவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து நடுவர் பணியில் இருந்து விலகினார்.[44]
2018 சூன் 15 இல், போர்த்துகலுக்கு எதிரான டியேகோ கொஸ்டாவின் கோல் நிகழ்பட உதவியுடன் தீர்மானிக்கப்பட்ட முதலாவது கோல் ஆகும்.[45] நிகழ்பட உதவியுடன் தீர்மானிக்கப்பட்ட முதலாவது தண்ட உதை சூன் 16 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக அந்துவான் கிரீசுமன் போட்ட கோல் ஆகும்.[46]
Remove ads
ஆரம்ப விழா
ஆரம்ப விழா 2018 சூன் 14 வியாழக்கிழமை மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் இடம்பெற்றது. தொடர்ந்து உருசிய அணிக்கும் சவூதி அரேபிய அணிக்கும் இடையில் முதல் போட்டி இடம்பெற்றது[47][48]
பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ சிறுவன் ஒருவனுடன் "உருசியா 2018" மேலாடை அணிந்து அரங்கினுள் நுழைந்தார். அதன் பின்னர் ஆங்கிலேயப் பாப் பாடகர் ரொபி விக்ல்லியம்சு, உருசியாவின் ஐடா கரிஃபுலீனாவுடன் இணைந்து ஒரு பாடலையும், தனித்து இரண்டு பாடல்களையும் பாடினார். இவர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட 32 அணிகளின் தேசியக் கொடிகளையும் பெயர்களையும் தாங்கியவண்ணம் பெண்களும் ஆண்களுமாக அரங்கினுள் வந்தனர்.[49]
2018 உலக்கோப்பையின் அதிகாரபூர்வமான கால்பந்துடன் ரொனால்டோ வந்தார். இப்பந்து அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 2018 மார்ச் மாதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பூமிக்கு சூன் ஆரம்பத்தில் திரும்பியிருந்தது.[49]
Remove ads
குழு நிலை ஆட்டம்
குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு (சுற்று 16) முன்னேறும்.
அனைத்து நேரங்களும் உள்ளூர் நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[50]
- சமநிலையை முறி கட்டளை விதி
குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்:
- எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
- எல்லாக் குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
- எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
- பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு ஏ
முதல் ஆட்டம் 2018 சூன் 14 இல் நடைபெற்றது. மூலம்: FIFA பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
(ந) நடத்தும் நாடு.
குழு பி
முதல் ஆட்டம் 2018 சூன் 15 இல் நடைபெற்றது. மூலம்: FIFA பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பார்வையாளர்கள்: 33,973[62]
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)
குழு சி
முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
குழு டி
முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பார்வையாளர்கள்: 43,319[71]
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)
குழு ஈ
முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பார்வையாளர்கள்: 64,468[77]
நடுவர்: பியோர்ன் குயிப்பர்சு (நெதர்லாந்து)
குழு எஃப்
முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பார்வையாளர்கள்: 42,300[82]
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)
குழு ஜி
முதல் ஆட்டம் 2018 சூன் 18 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
குழு எச்
முதல் ஆட்டம் 2018 சூன் 19 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
ஆட்டமிழக்கும் நிலை
ஆட்டமிழக்கும் நிலைகளில், வழமையான நேரத்தில் ஆட்டம் சமநிலையில் முடியுமானால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் (ஒவ்வொன்றும் 15 நிமிடங்களாக இரண்டு பகுதிகள்) ஒதுக்கப்படும். தேவைப்படின், சமன்நீக்கி மோதல் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[99]
ஆட்டம் ஒன்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படின், ஒவ்வோர் அணிக்கும் நான்காவது மாற்றீடு செய்ய அனுமதிக்கப்படும். உலகக்கோப்பை போட்டி ஒன்றில் முதல் தடவையாக இவ்வாறு விளையாட அனுமதிக்கப்படுகிறது.[40]
சுற்று 16 | கால் இறுதிகள் | அரை இறுதிகள் | இறுதி | |||||||||||
30 சூன் – சோச்சி | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
6 சூலை – நீசுனி நோவ்கோரத் | ||||||||||||||
![]() | 1 | |||||||||||||
![]() | 0 | |||||||||||||
30 சூன் – கசான் | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 4 | |||||||||||||
10 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க் | ||||||||||||||
![]() | 3 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
2 சூலை – சமாரா | ||||||||||||||
![]() | 0 | |||||||||||||
![]() | 2 | |||||||||||||
6 சூலை – கசான் | ||||||||||||||
![]() | 0 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
2 சூலை – ரசுத்தோவ் | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 3 | |||||||||||||
15 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 4 | |||||||||||||
1 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 1 (3) | |||||||||||||
7 சூலை – சோச்சி | ||||||||||||||
![]() | 1 (4) | |||||||||||||
![]() | 2 (3) | |||||||||||||
1 சூலை – நீசுனி நோவ்கோரத் | ||||||||||||||
![]() | 2 (4) | |||||||||||||
![]() | 1 (3) | |||||||||||||
11 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
![]() | 1 (2) | |||||||||||||
![]() | 2 | |||||||||||||
3 சூலை – சென் பீட்டர்சுபர்கு | ||||||||||||||
![]() | 1 | மூன்றாமிடப் போட்டி | ||||||||||||
![]() | 1 | |||||||||||||
7 சூலை – சமாரா | 14 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க் | |||||||||||||
![]() | 0 | |||||||||||||
![]() | 0 | ![]() | 2 | |||||||||||
3 சூலை – மாஸ்கோ (அத்கிறீத்தியே) | ||||||||||||||
![]() | 2 | ![]() | 0 | |||||||||||
![]() | 1 (3) | |||||||||||||
![]() | 1 (4) | |||||||||||||
சுற்று 16
பார்வையாளர்கள்: 44,287[101]
நடுவர்: சேசர் அர்த்தூரோ ரமோசு (மெக்சிக்கோ)
பார்வையாளர்கள்: 40,851[103]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)
பார்வையாளர்கள்: 64,042[106]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)
கால் இறுதிகள்
பார்வையாளர்கள்: 43,319[108]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)
அரை இறுதிகள்
மூன்றாமிடப் போட்டி
இறுதி
Remove ads
புள்ளிவிபரம்
கோல் அடித்தவர்கள்
64 ஆட்டங்களில் 169 கோல்கள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.64 கோல்கள்.
- 6 கோல்கள்
- 4 கோல்கள்
- 3 கோல்கள்
- 2 கோல்கள்
- 1 கோல்
ஆங்கெல் டி மரீயா
கேப்ரியல் மெர்காடோ
லியோனல் மெஸ்ஸி
மார்க்கோசு ரோஜோ
மிச்சி பட்சுயாவி
நாசர் சாட்லி
கெவின் டெ புரூய்னி
மறோவேன் பெலாயினி
ஆட்னன் ஜனுசாச்
டிரீசு மெர்ட்டென்சு
தோமசு மெயூனியர்
யான் வெர்த்தோங்கன்
ரொபெர்த்தோ பிர்மீனோ
பவுலீனியோ
ரெனாட்டோ அகுஸ்தோ
தியாகோ சில்வா
குவான் குவாத்ராதோ
ரதமெல் பல்காவோ
குவான் பெர்னாண்டோ குவின்டேரோ
கென்டல் வாஸ்டன்
மிலான் பதேலிச்
ஆந்திரேய் கிரமாரிச்
இவான் ரெக்கித்திச்
ஆன்டி ரெபிச்
தொமகோச் வீதா
கிறித்தியான் எரிக்சன்
மத்தாயசு யோர்ஜென்சன்
யூசுப் போல்சென்
டெலி அல்லி
ஜெசி லிங்கார்டு
ஹாரி மெகுவயர்
கீரன் திரிப்பியர்
பெஞ்சமின் பவார்
பவுல் போக்பா
சாமுவேல் உம்தித்தி
ரபாயெல் வரானி
டோனி குரூசு
மார்க்கோ ரெயூசு
அல்ஃபிரெயோ பின்போகசன்
கில்ஃபி சிகுரோசன்
கரிம் அன்சாரிபார்த்
கெங்கி அரகூச்சி
கெய்சூக்கி ஒண்டா
சிஞ்சி ககாவா
யுவா ஒசாக்கோ
யாவியர் எர்னாண்டெசு
இர்விங் லொசானோ
கார்லோசு வேலா
காலித் பூத்தாயிப்
யூசெப் என்-நெசிரி
விக்டர் மோசசு
பெலிப் பலோய்
அந்திரே கரீலோ
பவோலோ குவெரேரோ
சான் பெட்னாரெக்
கிரிசிகோர்சு கிரிச்சோவியாக்
பேபே
ரிக்கார்டோ குவரேசுமா
மாரியோ பெர்னாண்டசு
யூரி கசீன்ஸ்கி
அலெக்சாந்தர் கலோவின்
சலிம் அல்-டவ்சாரி
சல்மான் அல்-பராஜ்
சாதியோ மனே
உம்பாயே நியாங்
மூசா வாகுவே
அலெக்சாந்தர் கொலரோவ்
அலெக்சாந்தர் மித்ரோவிச்
கிம் யங்-குவொன்
இயாகோ அஸ்பாசு
இசுக்கோ
நேச்சோ
லுத்விக் அகுஸ்தின்சன்
எமில் போர்சுபர்கு
ஓலா தொய்வோனென்
யோசிப் திரிமிச்
பிளெரிம் சிமைலி
செர்தான் சாகிரி
கிரானித் ஹாக்கா
ஸ்டீவன் சூபர்
டிலான் புரொன்
பெர்சானி சசி
பிராக்கிரெடின் பென் யூசெப்
ஒசே கிமேனெசு
- 1 சுய கோல்
அசீசு பெகிச் (பிரான்சிற்கு எதிராக)
பெர்னாண்டீனியோ (பெல்ஜியத்திற்கு எதிராக)
மரியோ மஞ்சூக்கிச் (பிரான்சுக்கு எதிராக)
அகமது பாத்தி (உருசியாவிற்கு எதிராக)
எட்சன் ஆல்வரெசு (சுவீடனுக்கு எதிராக)
அசீசு புகாதூசு (ஈரானுக்கு எதிராக)
ஒகெனிக்காரோ எத்தேபோ (குரோவாசியாவுக்கு எதிராக)
தியாகோ சியோனெக் (செனிகலுக்கு எதிராக)
தெனீசு சேரிசெவ் (உருகுவைக்கு எதிராக)
செர்கேய் இக்னசேவிச் (எசுப்பானியாவுக்கு எதிராக)
யான் சொமர் (கோஸ்ட்டா ரிக்காவுக்கு எதிராக)
யாசின் மெரையா (பனாமாவுக்கு எதிராக)
மூலம்: பீஃபா[116]
விருதுகள்
போட்டிகளின் இறுதியில் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன. தங்க காலணி, தங்கப் பந்து, தங்கக் கையுறை அனைத்தையும் அடிடாஸ் நிறுவனம் வழங்கியது.[1]
Remove ads
பணப்பரிசு
அக்டோபர் 2017 இல் பணப்பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.[117]
சந்தைப்படுத்தல்


நற்றாளி
2018 உலகக்கோப்பைக்கான நற்றாளி (சின்னம்) 2016 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட வடிவமைப்புப் போட்டி மூலம் தெரிவு செய்யப்பட்டது. ஒரு பூனை, ஒரு புலி, ஒரு ஓநாய் ஆகிய மூன்று தெரிவுகளில் இருந்து இறுதித் தெரிவு பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டது. ஏறத்தாழ மொத்தம் ஒரு மில்லியன் வாக்குகளில் 53% வாக்குகளுடன் உருசியத் தேசிய அணியின் வண்ணங்களுடனான மேலணியுடன் சபிவாக்கா என்ற மாந்தவுரு ஓநாய் தேர்ந்தெடுக்கப்பட்டது.[118]
நுழைவுச் சீட்டுகள்
முதற்கட்ட நுழைவுச் சீட்டு விற்பனை 2017 செப்டெம்பர் 17-இல் ஆரம்பமாகி, அக்டோபர் 12 வரை இடம்பெற்றன.[119] போட்டிகளில் பங்குபற்றுவோருக்கும், பார்வையாளர்களுக்கும் வழக்கமான நுழைவாணை விதிகள் தளர்த்தப்பட்டன. எந்த நாட்டுக் குடியுரிமையானாலும், பார்வையாளர்கள் நுழைவாணையின்றி உருசியா வர அனுமதிக்கப்பட்டது.[120] ஆனாலும், பார்வையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய "இரசிகர் அடையாள அட்டை" ஒன்றைப் பெறவேண்டும். ஆட்டங்களைப் பார்ப்பதற்கு அவர்களிடம், நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை, ஏற்புடைய கடவுச்சீட்டு ஆகியவை வைத்திருக்க வேண்டும். பார்வையாளர்கள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துகளில் (பேருந்து, தொடருந்துகளில்) பயணச்சீட்டின்றி இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.[121][122][123]
ஆட்டப் பந்து
2018 உலகக்கோப்பைக்கான அதிகாரபூர்வமான பந்து "டெல்ஸ்டார் 18" என அழைக்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு 1970 ஆம் ஆண்டின் முதலாவது அடிடாஸ் உலகக்கோப்பை பந்தின் பெயரில் இருந்தும், வடிவமைப்பில் இருந்தும் பெறப்பட்டது. இப்பந்து 2017 நவம்பர் 9 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[124]
குழுநிலை ஆட்டங்களின் பின்னர், ஆட்டமிழக்கும் நிலைக்கான போட்டிகளில் "டெல்ஸ்டார் மிச்தா" என்ற பெயருள்ள பந்து பயன்படுத்தப்படும். மிச்தா (உருசியம்: мечта) என்பது உருசிய மொழியில் கனவு அல்லது குறிக்கோள் எனப் பொருள்.[125]
அதிகாரபூர்வப் பாடல்
"லிவ் இட் அப்" (Live It Up) என்ற பாடல் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ பாடலாகும். இதனை வில் சிமித், நிக்கி ஜாம், எரா இஸ்ரெபி ஆகியோர் பாடி, 25 மே அன்று வெளியிட்டிருந்தனர். பீஃபா உலகக்கோப்பை உத்தியோகபூர்வ இசைக் காணொளி 8 சூன் அன்று வெளியிடப்பட்டது.[126]
Remove ads
விளம்பர ஆதரவு
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads