டிரினிட்டி பாலம், பெரு மான்செசுட்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிரினிட்டி பாலம் (Trinity Bridge) ஒரு மூவழி நடைப்பாலம். இர்வெல் ஆற்றுக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் மான்செசுட்டரில் உள்ள இரண்டு நகரங்களையும், பெரு மான்செசுட்டரில் உள்ள சல்போர்டையும் இணைக்கிறது. எசுப்பானியக் கட்டிடக்கலைஞரான சந்தியாகோ கலத்திராவாவினால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், 1995ல் கட்டிமுடிக்கப்பட்டது. கலத்திராவாவின் தொடக்ககாலப் பாலங்களில் ஒன்றான இதுவே இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட ஒரே திட்டம் ஆகும்.
Remove ads
அமைப்பு
நேரான வெண்ணிறக் கோடுகளாக அமைந்த இந்தப் பாலத்தின் கட்டமைப்பு சந்தியாகோ கலத்திராவாவின் வழமையான வடிவமைப்புப் பாணியில் அமைந்தது. 41 மீட்டர் உயரமான வட்டக் குறுக்குமுகம் கொண்ட தாங்கு தூண் இப்பாலத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.[1]
மேற்கோள்கள்
படங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads