டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு (triethyl orthoformate) என்பது ஒர் ஆர்த்தோஎசுத்தர் வகைச் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C7H16O3 ஆகும். சந்தையில் வணிகரீதியாகவும் இது கிடைக்கிறது. ஐதரசன் சயனைடு மற்றும் எத்தனால் இரண்டும் வினைபுரிவதன் மூலம் டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு தயாரிக்கும் தொகுப்பு முறை தொழிற் சாலைகளில் பின்பற்றப்படுகிறது [1].
சோடியம் ஈத்தாக்சைடை குளோரோஃபார்ம் உடன் வினைப்படுத்தியும் டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டைத் தயாரிக்க முடியும்:[2]
- CHCl3 + 3 Na + 3 EtOH → HC(OEt)3 + 3/2 H2 + 3 NaCl
டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினையில் பங்கேற்கிறது:[3]
எடுத்துக்காட்டு :

Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads