மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு

From Wikipedia, the free encyclopedia

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு
Remove ads

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு ( Trimethyl orthoformate ) என்பது ஒரு எளிய ஆர்த்தோயெசுத்தர் ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இது முகவராக பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைக் கரிமத் தொகுப்பு வினையில் இச்சேர்மம் ஆல்டிகைடுகளுக்குரிய பாதுகாப்பு குழுவை அறிமுகம் செய்கிறது. ஆல்டிகைடும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டும் வினைபுரிவதால் அசிட்டால் விளைகிறது. பொதுவான வினைகளில் இந்த அசிட்டால்களை தொடர்ந்து அசிட்டால்களாகவே பாதுகாக்காமல் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆல்டிகைடுகளாக மாற்றிக்கொள்ள இயலும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

ஐதரசன் சயனைடு மற்றும் மெத்தனால் வினைபுரிவதன் மூலம் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு தயாரிக்கும் தொகுப்பு முறை தொழிற் சாலைகளில் பின்பற்றப்படுகிறது[2].

மீத்தாக்சிமெத்திலீன் தொகுதிகளை உருவாக்கும் பயனுள்ள அடிப்படைப் பொருளாகவும் பல்லினவகை வளையங்களை உருவாக்கவும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட் பயனுள்ளதாக உள்ளது. மின்னணு அடிமூலக்கூறுடன் ஒரு பார்மைல் தொகுதியை அறிமுகப்படுத்தவும் இச்சேர்மம் உபயோகமாகிறது. உதாரணமாகப் பல தொடர்வினைகளில் பங்கேற்கும் R-NH-CHO என்ற ஆல்டிகைடு உருவாக RNH2 வை அறிமுகப்படுத்துகிறது. பூசணக்கொல்லிகள் அசோசைசிடிரோபின் மற்றும் பைகோசிடிரோபின், சிலவகை புளோஆக்சின் வகை பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், பலவகை மருந்துவகை இடைநிலைப் பொருட்கள் தயாரிக்கவும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட் உதவுகிறது[2].

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads