டி. ஒய். பாட்டில் அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. ஒய். பாட்டில் அரங்கம் (மராத்தி:डी.वाय.पाटील स्टेडीयम) என்பது இந்தியாவின் நேவி மும்பையில் உள்ள நேருல் எனும் இடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது டி. ஒய். பாட்டில் வித்யாநகர் வளாகத்தில் அமைந்துள்ளது. சர்வதேச துடுப்பாட்டங்களை நடத்தக்கூடிய வசதிகள் இங்குள்ளன. இதனை இந்தியாவின் பிரபல கட்டிடக் கலைஞர் ஹபீஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த அரங்கம் மார்சு 4, 2008 அன்று திறக்கப்பட்டது. இங்கு மூன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 2008 ஐபிஎல் இறுதிபோட்டி இங்குதான் நடைபெற்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads