நவி மும்பை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவி மும்பை (Navi Mumbai, மராத்தி: नवी मुंबई, IAST: Navi Muṃbaī) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தானே மாவட்டம் மற்றும் ராய்கர் மாவட்டத்தின் பகுதிகளின் மேற்கு கடலோரத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi)பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[1] இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.
தானே கடற்கழியின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வீடுகளைக் கொண்ட நவி மும்பை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,20,547 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,10,060 மற்றும் 5,10,487 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 837 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,29,591 ஆகும். சராசரி எழுத்தறிவு 89.62 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 80.39 %, இசுலாமியர்கள் 8.68 %, பௌத்தர்கள் 6.23 %, சமணர்கள் 0.99 %, கிறித்துவர்கள் 2.35 %, சீக்கியர்கள் 1.01 % மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[2]
நவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாசி, நெரூள் ஆகிய பகுதிகளாகும். நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்ட பின்னர் அண்மையிலுள்ள கார்கர் மற்றும் புது பன்வேல் பகுதிகளும் பெரும் குடியிருப்புக் கட்டமைப்பு வளர்ச்சியை காண்கின்றன. நவி மும்பையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக நெரூள் மற்றும் வாசி]]யில் வாழ்கின்றனர். பிறர் பேலாப்பூர், கார்கர், சான்படா, ஐரோலி, ஜூய்நகர் கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads