டெக்கான் விரைவுவண்டி

From Wikipedia, the free encyclopedia

டெக்கான் விரைவுவண்டி
Remove ads

டெக்கான் விரைவுவண்டி(Deccan Express) என்பது புனே மற்றும் மும்பை நகரங்களுக்கிடையே செயல்படும் தொடருந்தாகும். இது தினமும் மாலை 3.30 மணிக்கு புறப்படும். இதன் பயணதூரம் 192 கிலோமீட்டர்.[1]

Thumb
தொடருந்து எண்: 11008 -டெக்கான் எக்ஸ்பிரஸ்
Thumb
தொடருந்து எண்: 11008 டெக்கான் எக்ஸ்பிரஸ் - குளிர்சாதன இருக்கைவசதிப் பெட்டி
Thumb
டெக்கான் எக்ஸ்பிரஸ்-புனே சந்திப்பில்
Thumb
டெக்கான் எக்ஸ்பிரஸ் - 2 வது வகுப்பு இருக்கைவசதிப் பெட்டி

சேவைகள்

இந்திய ரயில்வேயினால் டெக்கான் எக்ஸ்பிரஸ் செயல்படுத்தப்படுகிறது. இது மத்திய ரயில்வே பிரிவின்கீழ் இயங்குகிறது. புனே முதல் மும்பை வரை இயங்கும், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிற்கக்கூடிய ஆறு தொடருந்துகளில் டெக்கான் விரைவுவண்டியும் ஒன்று. இது தவிர மீதமுள்ள ஐந்து தொடருந்துகள்: பிரகதி விரைவுவண்டி, டெக்கான் குயின், இந்திரயாணி விரைவுவண்டி மற்றும் இன்டர்சிட்டி விரைவுவண்டி.

வண்டி எண்

11007 மற்றும் 11008 என்ற வண்டி எண்களுடன் டெக்கான் விரைவுவண்டி செயல்படுகிறது. 11007 என்ற வண்டி எண்ணுடன் மும்பையில் இருந்து புனே சந்திப்பிற்கும், 11008 என்ற வண்டி எண்ணுடன் புனே சந்திப்பில் இருந்து மும்பை ரயில் நிலையத்தினையும் அடைகிறது.

பெயர்க் காரணம்

புனே நகரம் அமைந்துள்ள டெக்கான் பீடபூமியினை நினைவுகூறும் வகையில் டெக்கான் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]

கால அட்டவணை

மும்பை சிஎஸ்டி தொடருந்து நிலையத்தில் இருந்து புனே சந்திப்பினை அடைவதற்குள் பத்து தொடருந்து நிலையங்களில் நிற்கிறது. ஒவ்வொரு தொடருந்து நிலையத்திலும் இரண்டு நிமிடங்கள் நிற்கிறது. நிறுத்தற்குரிய பத்து தொடருந்து நிலையங்கள்: தாதர் (DR), தானே (TNA), கல்யாண் சந்திப்பு (KYN), நேரல் (NRL), கர்ஜாட் (KJT), காண்டாலா (KAD), லோனாவாலா (LNL), டாலேகௌன் (TGN), காட்கி (KK) மற்றும் சிவாஜி நகர் (SVJR). இதன் மொத்த பயண நேரம் நான்கு மணிநேரம், பத்து நிமிடங்கள் ஆகும்.

11007 என்ற வண்டி எண் கொண்ட டெக்கான் விரைவுவண்டி, மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு புனே சந்திப்பினை காலை 11.05 மணிக்கு சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து திரும்பும்போது புனே சந்திப்பில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தினை இரவு 7.40 மணியளவில் சென்றடைகிறது[3][4].

Remove ads

அட்டவணை

வண்டி எண் 11007 இன் வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான அட்டவணை கீழே தொகுக்கப்பட்டுள்ளது:[5]

மேலதிகத் தகவல்கள் எண்., நிலையத்தின் பெயர் (குறியீடு) ...
Remove ads

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள் (11008):

மேலதிகத் தகவல்கள் எண்., நிலையத்தின் பெயர் (குறியீடு) ...
Remove ads

பெட்டிகள் தொகுத்தல்

டெக்கான் விரைவுவண்டியின் பெட்டிகளின் தொகுத்தல் விவரம்[6]:

  • வண்டி எண்: 11008
L – SLR - MLT - C2 - C1 – GEN – LDS - GEN - GEN - D5 - D4 - D3 - D2 - D1 - GEN - GEN - GEN - GEN - SLR
  • வண்டி எண்:11007
SLR – UR - UR – UR – UR - D1 - D2 - D3 - D4 - D5 - C2 - C1 - UR - UR – SLR

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads