சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்

மும்பையில் ஒரு வரலாற்று ரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia

சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
Remove ads

சத்திரபதி சிவாசி முனையம் (ஆங்கிலம் : Chhatrapati Shivaji Maharaj Terminus, CSMT, மராத்தி மொழி: छत्रपती शिवाजी टर्मिनस) என்பது மும்பையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இது இயுனசுகோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1] இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது. இது 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது[2] இது இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையமாகும். முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்திரபதி சிவாசி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில்நிலையம் பிரெட்ரிக் வில்லியம் சிடீவென்சு என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (முன்னாள் விக்டோரியா தெருமினசு), வகை ...
விரைவான உண்மைகள் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், பொதுவான தகவல்கள் ...
Remove ads

நடைமேடைகள்

18 நடைமேடைகள் கொண்ட சத்திரபதி சிவாசி மகாராச தொடருந்து நிலையத்தின் 7 நடைமேடைகள், மும்பையின் புறநகர்களுக்கு செல்லும் தொடருந்துகளுக்கானது. 8 முதல் 18 நடைமேடைகளிலிருந்து, இந்தியாவின் பிற நகரங்களுக்கு செல்லும் விரைவு தொடருந்துகளுக்கானது. 18-ஆம் எண் நடைமேடையிலிருந்து மட்டும் ராசதானி விரைவுவண்டி, துரந்தோ அதிவேக விரைவு தொடருந்து, கரீப், சதாப்தி விரைவுவண்டி மற்றும் தேச்சசு விரைவுத் தொடருந்துகள் இயங்குகிறது. [3]16 ஏப்ரல் 2013 முதல் நடைமேடைகளில் குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் மண்டபம் துவக்கப்பட்டது. மேலும் குளிரூட்டப்பட்ட ஆண்களுக்கான 58 படுக்கைகளும், பெண்களுக்கான 20 படுக்கைக வசதியும் உள்ளது. [4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads