டெர்பியம் மூவாக்சைடு

தெர்பியத்தின் வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia

டெர்பியம் மூவாக்சைடு
Remove ads

டெர்பியம் மூவாக்சைடு (Terbium(III) oxide), அல்லது டெர்பியம் செசுகியுவாக்சைடு (terbium sesquioxide) என்பது அரியவகை தனிமவகையான டெர்பியத்தின் கனிமம் செசுகிவாக்சைடு ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு Tb2O3 ஆகும். கால்சியம்[2] உடன் கலப்பிடப்பட்டால் இது ஒரு பி-வகை குறைக்கடத்தி ஆகும். டெர்பியம்(III,IV) ஆக்சைடை (Tb4O7) ஐதரசன் வாயுவில் 1300 °செ வெப்பநிலையில் 24 மணிநேரம்[3] வைத்திருந்தால் டெர்பியம் மூவாக்சைடைப் பெற முடியும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

இது ஒரு அடிப்படை ஆக்சைடு ஆகும். நீர்த்த அமிலங்களில் இதை எளிதாக கரைத்து விடமுடியும். இறுதியாக நிறமற்ற டெர்பியம் உருவாகிறது.[4]

Tb2O3 + 6H+ → 2 Tb3+ + 3 H2O

இதனுடைய படிகவடிவ அமைப்பு கனசதுர வடிவம் ஆகும். மேலும் இதனுடைய நெய்யரி மாறிலி மதிப்பு 1057 பி.மீ. ஆகும்[5].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads