தெல்பி (நகரம்)

கிரேக்கத்தில் உள்ள தொல்லியல் தளம் மற்றும் நகரம் From Wikipedia, the free encyclopedia

தெல்பி (நகரம்)
Remove ads

டெல்பி என்பது கிரீஸ் நாட்டில் உள்ள பர்னாசஸ் மலையின் தென்மேற்கு நீட்சிப் பகுதியில் போசிஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு தற்கால நகரத்தையும் அப்பகுதியிலிருக்கும் ஒரு தொல்லியல் களத்தையும் குறிக்கும். இது பண்டைய கிரேக்க உலகின் முக்கியமான குறிசொல்பவரான, பைத்தியா (Pythia) என்னும் அப்பல்லோ கடவுளின் குறிசொல்பவர் இருந்த இடமாகும். அத்துடன் இது அப்பல்லோ கடவுளை வழிபடுவதற்கான முக்கிய புனிதத்தலமும் ஆகும். இங்கு அப்பல்லோ கடவுளுக்கு கோயிலும் புனித வளாகமும் இருந்தது. கிரேக்கத்தின் பல பகுதிகளிலுமிருந்து வரும் வீரர்கள் பைத்தியன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் இடமாகவும் இருந்தது. இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது.

விரைவான உண்மைகள் டெல்பி தொல்லியல் களம், வகை ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads