டேவிட் பெக்காம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் (David Robert Joseph Beckham /ˈbɛkəm/ BEK-əm;[1] பிறப்புஃ மே 2,1975) என்பவர் இங்கிலாந்து மேனாள் தொழில்முறைக் கால்பந்து வீரர், இன்டர் மியாமி சி. எஃப் இன் தலைவர் மற்றும் இணை உரிமையாளர், சால்ஃபோர்ட் சிட்டியின் இணை உரிமையாளர் ஆவார்.[2] முதன்மையாக வலது நடுக்கள வீரராக விளையாடினார். பந்தினை கடத்திச் செல்லல், ஃப்ரீ கிக் ஆகியவற்றிற்காகப் பரவலாக புகழ் பெற்றார். பெக்காம் தனது தலைமுறையின் மிகச்சிறந்த மத்திய கள வீரராரகவும் சிறந்த ஃபிரீ கிக் வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[1][3][4] தனது தொழில் வாழ்க்கையில் 19 முக்கிய கோப்பைகளை வென்றார், மேலும் இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் ஆவார்.[4]

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார், 1992 இல் தனது 17- ஆவது வயதில் அணியில் அறிமுகமானார்.[5] யுனைடெட் அணிக்காக ஆறு முறை பிரீமியர் லீக் பட்டத்தையும், இரண்டு முறை FA கோப்பையையும், இரண்டு முறை FC அறக்கட்டளை கேடயத்தையும், 1999 இல் கண்டங்களுக்கிடையேயான கோப்பை மற்றும் UEFA சாம்பியன்சு லீகையும் வென்றார்.[6] ரியல் மாட்ரிட் அணிக்காக நான்கு பருவங்களில் விளையாடினார், தனது இறுதி ஆண்டில் லா லிகாவினை வென்றார்.[7] சூலை 2007 இல், பெக்காம் மேஜர் லீக் சாக்கர் கிளப் எல். ஏ. கேலக்ஸி அணிக்காக ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[8] மே 2013 இல் ஓய்வு பெற்றார்.[9]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி

டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.[10][11] இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.[12] இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.[13] இவருக்கு லின் ஜார்ஜினா என்ற அக்காவும், ஜோன் லூயிஸ் என்ற தங்கையும் உள்ளனர்.

பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.[14] பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.[15] "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட் எனும் தனது நூலில் கூறுகிறார்.[16]

Remove ads

காற்பந்துச் சங்க தொழில் வாழ்க்கை

மான்செஸ்டர் யுனைடெட்

1991-1994: இளமை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

சூலை 8,1991- இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு பயிற்சி பெறுபவராகக் கையெழுத்திட்ட பெக்காம், எரிக் ஹாரிசனால் பயிற்றுவிக்கப்பட்ட ரியன் கிக்ஸ், கேரி நெவில், பில் நெவில் மற்றும் பால் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு, மே 1992 இல் FA இளைஞர் கோப்பை வெல்ல உதவியது.[17] 1992 ஏப்ரல் 14-இல் கிரிஸ்டல் பேலசு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-3 என்ற இலக்குகள் கணக்கில் முதல் கட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக இரண்டாவது இலக்கினை அடித்தார். மே 15-அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில், பெக்காம் 90 நிமிடங்களில் விளையாடினார், அந்தச் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஆதரவாக 3-3 என்ற இல- அன்று ஒரு தொழில்முறை வீரராகக் கையெழுத்திட்டார்.[17]

ரியல் மாட்ரிட்

2003 ஆம் ஆண்டின் பரிமாற்றச் சாளரம் நெருங்கும் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி பெக்காமை பார்சிலோனாவிற்கு விற்க ஆர்வமாக இருந்தது [6] இரண்டு சங்கங்களும் பெக்காமின் இடமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவித்தன,[6] ஆனால் அதற்கு பதிலாக இவர் €37 மில்லியன் தொகையில் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் எசுப்பானிய வாகையாளரான ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தார்.[18] உலகளாவிய நட்சத்திரங்களின் கேலக்டிகோஸ் சகாப்தத்தில் பெக்காம் கையெழுத்திட்டார்.[19]

Thumb
2003 இல் ரியல் மாட்ரிட்டில் பெக்காம் (மேல் மற்றும் ஜினெடின் ஜிதேன்)
Remove ads

சர்வதேசத் தொழில் வாழ்க்கை

Thumb
பெக்காம் 115 போட்டிகளில் 59 முறை இங்கிலாந்தின் தலைவராக இருந்தார். இது பாபி மூர், பில்லி ரைட் மற்றும் பிரையன் ராப்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்சமாகும் (தலைவராக).[20]

செப்டம்பர் 1,1996- இல், மால்டோவா அணிக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பெக்காம் இங்கிலாந்து அணிக்காக முதல் முறையாக விளையாடினார்.[21]

சூன் 1997 இல், 1998 உலகக் கோப்பைக்கான பயிற்சியாக பிரான்சில் நடைபெற்ற நட்பு சர்வதேச கால்பந்து போட்டியான டூர்னோய் டி பிரான்சில் பங்கேற்றார்.[22]

1998 உலகக் கோப்பை

1998 உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்காக அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெக்காம் விளையாடினார். பிரான்சில் நடந்த இறுதிப் போட்டிக்கான 23 பேர் கொண்ட அணியில் இருந்தார், ஆனால் அணியின் மேலாளர் கிளென் ஓடில் இவர் போட்டியில் கவனம் செலுத்தவில்லை என்று பகிரங்கமாக் குற்றம் சாட்டினார். இங்கிலாந்தின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.[23][24] கொலம்பியாக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கான தனது முதல் இலக்கை அடித்ததுடன் அணி 2-0 எனும் கணக்கில் வெல்ல உதவினார்.[25]

தனிப்பட்ட வாழ்க்கை

Thumb
2019 இல் பெக்காம் மற்றும் மனைவி விக்டோரியா

1997 ஆம் ஆண்டில், பெக்காம் விக்டோரியா ஆடம்சுடன் இணை பழகலில் இருந்தார். அவர் மான்செஸ்டர் யுனைடெட் போட்டியில் கலந்து கொண்டார்.[6][6][26] அந்த நேரத்தில் பிரிட்டனின் சிறந்த பரப்பிசைக் குழுக்களில் ஒன்றான ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்ற பரப்பிசைக் குழுவின் "போஷ் ஸ்பைஸ்" என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார், மேலும் அவரது குழுவும் பரவலாக அறியப்பட்டதாக இருந்தது. அவர்களின் உறவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இணைக்கு ஊடகங்கள் "போஷ் அண்ட் பெக்ஸ்" என்று பெயரிட்டன.[6] தனது காதலை பெக்கேம் சனவரி 24,1998 - இல் இங்கிலாந்தின் செசண்டில் உள்ள ஓர் உணவகத்தில் தெரிவித்தார்.

மேலதிகத் தகவல்கள் சங்கம், பருவம் ...

சர்வதேசப் போட்டிகளில்

மேலதிகத் தகவல்கள் தேசிய அணி, ஆண்டு ...
Remove ads

கௌரவங்கள்

மான்செஸ்டர் யுனைடெட்

  • பிரீமியர் லீக் 1995-96,1996-97,[31]
  • FA Cup: 1995-96, 1998–99
  • FA தொண்டு கேடயம் 1996,1997
  • UEFA சாம்பியன்ஸ் லீக்ஃ 1998-99
  • கண்டங்களுக்கிடையேயான கோப்பை-1999

ரியல் மாட்ரிட்[32]

  • லா லிகா 2006-07
  • எசுப்பானியாவின் சூப்பர்கோபா- 2003

மேற்கோள்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads