டோக்கெலாவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1].

1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.
டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads