டொமினிக் ஜீவா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 சூன் 1927 – 28 சனவரி 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]
Remove ads
இவரது நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரைத் தொகுப்புகள்
மொழிபெயர்ப்பு நூல்
Remove ads
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
விருதுகள்
- 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
- 2007: சங்கச் சான்றோர் விருது ( இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.)
மறைவு
டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[15] இறந்த பின்னர் இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல் 2021 ஜனவரி 30 சனிக்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படாமல் கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.[16]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads