டோங்க் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

டோங்க் இராச்சியம்
Remove ads

டோங்க் இராச்சியம் (Tonk State) கிபி 1806 முதல் தன்னாட்சியுடன் விளங்கியது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இராஜபுதன முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக மாறியது. இதன் தலைநகரம் டோங் ஆகும். தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தின் டோங்கு மாவட்டத்தில் உள்ளது. இந்த இராச்சியத்தை 1806-ஆம் ஆண்டில் நிறுவியவர் முகமது அமீர் கான் (1769–1834) ஆவார்.[1]1901-ஆம் ஆண்டில் டோங்க் இராச்சியத்தின் மக்கள் தொகை 2,73,201 ஆகும். இந்த இராச்சியத்தின் பனாஸ் ஆறு பாய்கிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த டோங்க் இராச்சியம், 1817-ஆம் ஆண்டில் பாதுகாப்பு காரணமாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுடன் துணைப்படைத் திட்டம் எனும் உடன்படிக்கை செய்து கொண்டது. எனவே இந்த இராச்சியம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டு தோறும் திறை செலுத்த வேண்டியதாயிற்று. இந்திய விடுதலைக்குப் பிறகு 1949-ஆம் ஆண்டில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும் அரசியல் ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Remove ads

புவியியல்

ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் அமைந்த இந்த இராச்சியம் சுண்ணாம்புப் பாறைகள், மணற்கற்கள் கொண்டது. 1901_இல் இந்த இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 2553 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 273,201 ஆகும். இந்த இராச்சியத்தின் பனாஸ் ஆறு பாய்கிறது.

ஆட்சியாளர்கள்

இதன் ஆட்சியாளர்கள் ஆப்கானித்தானின் பஷ்தூன் பழங்குடியினர் ஆவார்.

  • முகமது அமீர் கான் (1806–1834)
  • முகமது வசீர் கான் (1834–1864)
  • முகமது அலி கான் (1864–1867)
  • இப்ராகிம் அலி கான் ] (1867  23 சூன் 1930)
  • நவாப் முகமது அலி (23 சூன் 1930  31 மே 1947)
  • முகமது பரூக் அலி கான் (1947–1948)
  • முகமது இஸ்மாயில் அலி கான் (1948–1974)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads