தாகோத் மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தாகோத் மாவட்டம்map
Remove ads

தாகோத் மாவட்டம் அல்லது தோஹாத் மாவட்டம் (Dahod District) or (Dohad District), மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் தகோத் நகரம் ஆகும். மாவட்டப் பரப்பளவு 3642 சதுர கிலோ மீட்டராகும். மக்கட்தொகை 21,26,558. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி. மீ.,க்கு 583 என்ற அளவில் உள்ளது. பஞ்சமகால் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, 2 அக்டோபர் 1997இல் தகோத் மாவட்டம் துவக்கப்பட்டது.

Thumb
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

முன்னர் இம்மாவட்டம், பாரியா சமஸ்தானம் மற்றும் சஞ்செலி சமஸ்தானம் ஆகிய சமஸ்தானங்களைக் கொண்டிருந்தது. இம்மாவட்டத்தில் தாவூதி போரா பிரிவு இசுலாமியர்கள் (Dawoodi Bohra) அதிகம் உள்ளனர். மேலும் பில் (Bhil) மலை இன மக்கள் கிராமப்புறங்களில் உள்ளனர்.

Remove ads

மாவட்ட எல்லைகள்

மேற்கே பஞ்சமகால் மாவட்டம், தெற்கே சோட்டா உதய்பூர் மாவட்டம், கிழக்கே மற்றும் தென்கிழக்கே மத்தியப் பிரதேசம், வடக்கே மற்றும் வடகிழக்கே ராஜஸ்தான் மாநிலமும் எல்லைகளாக இம்மாவட்டம் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

தகோத் மாவட்டம் ஏழு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. தாகோத்
  2. ஜலோத்
  3. தேவ்காத் பாரியா (பாரியா சமஸ்தானம்)
  4. கர்பாடா
  5. லிம்கேதா
  6. பதேபுரா
  7. தன்பூர்

பொருளாதாரம்

இந்தியாவின் 640 மாவட்டங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்களில் தகோத் மாவட்டமும் ஒன்று.[1]

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தகோத் மாவட்ட மக்கள் தொகை 2,126,558 ஆகும்.[2]. இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது 215வது இடத்தை வகிக்கிறது. மக்கட்தொகை அடர்த்தி சதுர கி.மீ.,க்கு 582 வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 60.60% ஆக உள்ளது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads