தக்காக்கி கஜித்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தக்காக்கி கஜித்தா (Takaaki Kajita, 梶田隆章, கஜித்தா தக்காக்கி, பிறப்பு: 1959) சப்பானிய இயற்பியலாளர் ஆவார். இவர் நியூத்திரினோ (நுண்நொதுமி) ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அறியப்படுகிறார். நியூத்திரினோக்கள் ஒரு திணிவைக் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், கனடாவைச் சேர்ந்த ஆர்தர் பி. மெக்டொனால்டுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Remove ads
பணி
கஜித்தா சைத்தாமா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று (1981) பின்னர் தனது முனைவர் பட்டத்தை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் பெற்றுக் கொண்டார். 1988 முதல் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வுக்கான கல்விக்கழகத்தில் பணியாற்றுகிறார். 1999 ஆம் ஆண்டு முதல் அங்கு பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads