இயற்பியலுக்கான நோபல் பரிசு

From Wikipedia, the free encyclopedia

இயற்பியலுக்கான நோபல் பரிசு
Remove ads

இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics, சுவீடிய: Nobelpriset i fysik), ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. மற்ற நோபெல் பரிசுகள் வேதியியல் நோபல் பரிசு, இலக்கிய நோபல் பரிசு, உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு ஆகியவை. இயற்பியலுக்கான நோபெல் பரிசை முதன்முதலாக இடாய்ச்சுலாந்து (செருமன்) நாட்டைச் சேர்ந்த வில்லெம் கோன்ராடு ரோண்ட்டகென் (Wilhelm Conrad Röntgen) என்பார் புதிர்க்கதிர்கள் அல்லது எக்ஃசு-கதிர்கள் (X-கதிர்கள்) என்பனவற்றைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றார். இப்பரிசு வழங்குவதை நோபெல் நிறுவனம் செயற்படுத்துகின்றது. இப்பரிசு இயற்பியலுக்காக வழங்கப்பெறும் மிகுபெருமை வாய்ந்த தலைசிறந்த பரிசாகக் கருதப்படுகின்றது. இப்பரிசு ஆண்டுதோறும் இசுட்டாகோமில் (Stockholm) நோபெல் இறந்த ஆண்டுநிறைவு நாளான திசம்பர் 10 அன்று வழங்கப்பெறுகின்றது.

விரைவான உண்மைகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு, விளக்கம் ...
Thumb
முதன்முதலாக இயற்பியல் நோபெல் பரிசுபெற்ற வில்லெம் ரோண்ட்டெகென்(Wilhelm Röntgen) (1845–1923).
Remove ads

பின்புலம்

ஆல்ஃபிரட் நோபெல், தன்னுடைய கடைசி உயிலில் அவருடைய பணத்தை மாந்த குலத்துக்கு யாவற்றினும் மிகுந்த நன்மை தரும் இயற்பியல், வேதியியல், உடலியக்கவியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள், படைப்புகள் செய்தவர்களுக்கும், அமைதிக்கு உழைத்தவர்களுக்கும் பரிசுகள் உருவாக்கித் தருமாறு பணித்திருந்தார்[1][2] ஆல்ஃபிரட் நோபெல் பல உயில்கள் எழுதியிருந்தாலும், கடைசியாக தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் அவர் எழுதி பாரிசில் உள்ள சுவீடன்-நோர்வே கிளப்பில் (Swedish-Norwegian Club) நவம்பர் 27, 1895 அன்று கையெழுத்திட்ட அதுவே கடைசி உயில்[3][4] நோபெல் தன்னுடைய மொத்த சொத்தில் 94% ஐ, 31 mமில்லியன் சுவீடன் குரோனார் (Swedish kronor) (2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி அமெரிக்க டாலர் $186 மில்லியன்) பணத்தை ஐந்து பரிசுகள் நிறுவ விட்டுச்சென்றார்.[5] உயிலில் இருந்த ஐயப்பாடுகளால் ஏப்பிரல் 26, 1897 அன்றுதான் நோர்வேயின் நாடாளுமன்றம் ("இசுட்டோர்ட்டிங்" Storting) ஒப்புதல் அளித்தது[6][7] இந்த உயிலைச் செயற்படுத்தியவர்கள் ராகுநர் சோல்மன் (Ragnar Sohlman), ருடோல்ப் லில்யெக்கிசுட்டு (Rudolf Lilljequist). இவர்கள் இருவரும் நோபெல் கூறிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்ய நோபெல் நிறுவனத்தை உருவாக்கினர்.

Remove ads

பரிசு பெற்றவர்களின் பட்டியல்

முதன்மைக் கட்டுரை: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பரிசு பெற்றவர்[A] ...
Remove ads

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads