தங்க தமிழ்ச்செல்வன்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்க தமிழ்ச்செல்வன் (Thanga Tamil Selvan) என்பவர் தமிழக அரசியல்வாதியும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 காலப்பகுதியில் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
2001 தேர்தலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெ. ஜெயலலிதா போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா போட்டியிட வசதியாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதன்பிறகு இவர் இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜ்ய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது, இவர் டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி. டி. வி. தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் சபாநாயகர் ப. தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[1][2] பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பொதுத் தேர்தல், 2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி 2019 சூன் 28 அன்று திமுகவில் இணைந்தார்.[3]
2021 தேர்தலில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியற்றார்.
- 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads