ஆண்டிபட்டி

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆண்டிப்பட்டி (ஆங்கிலம்:Andippatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்

இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில், அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஆண்டிப்பட்டி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27,287 மக்கள்தொகை கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது.[4][5]

இப்பேரூராட்சியானது ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

Remove ads

வரலாறு

ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9-ஆவது பட்டம் ஏற்ற ராஜகம்பளம் வகையறா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10-ஆவது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது. இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும், சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர். இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது.

கைத்தறி நெசவுத் தொழில்

தெற்கே மூப்பர் சாதியைச் சேர்ந்தவர்கள் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, வண்டியூர், கொழிஞ்சிப்பட்டி, எனப்பட்டி அதிக அளவில் உள்ளனர்.

ஆண்டிப்பட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள சாலியர் சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Remove ads

திரைப்படங்கள்

சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. வாஞ்சிநாதன், அழகர்சாமியின் குதிரை, தர்மதுரை, பருத்திவீரன், கருத்தம்மா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தர பாண்டியன், மதயானைக் கூட்டம் போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads