தசாவதாரம் (2008 திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தசாவதாரம் (2008 திரைப்படம்)
Remove ads

தசாவதாரம் (Dasavathaaram), 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

விரைவான உண்மைகள் தசாவதாரம், இயக்கம் ...
Remove ads

பாத்திரங்கள்

கமலின் பத்து பாத்திரங்கள்

Remove ads

கதைக்கோப்பு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் 2004 சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்களும் ஒழுங்கின்மை கோட்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டாம்பூச்சி விளைவு ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த உயிரிப் பேரழிவுக் கிருமி தீய சக்திகளுக்குக் கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரைப் பிடித்து அந்த உயிரியல் அழிவியை எடுக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம்.

Remove ads

சிறப்புக் காட்சிகள்

12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன.

பாடல்கள்

No.பாடல்பாடகர்கள்நீளம் (நிமிடம்:நொடி)பாடலாசிரியர்நடிப்பு
1உலக நாயகனேவினித் சிங்5:34வைரமுத்துகே. எஸ். ரவிக்குமார் நடனம்.
2கல்லை மட்டும் கண்டால்ஹரிஹரன் குழுவினர்5:28வாலிகமல் 12ஆம் நூற்றாண்டு இரங்கராஜன் நம்பியாகவும் நெப்போலியன் இரண்டாம் குலோத்துங்க சோழனாகவும்.
3ஓ...ஓ...சனம் கமல் ஹாசன், மகாலக்ஷ்மி ஐயர்5:31வைரமுத்துஅவதார் சிங் (கமல்) தனது மனைவி ரஞ்சிதாவுடன் (ஜெயபிரதா) ஒரு இசை நட நிகழ்ச்சியில்
4முகுந்தா முகுந்தாகமல் ஹாசன், சாதனா சர்கம்6:32வாலிஅசின், விஷ்ணுவின் அவதார பெருமைகளைப் பாட வயதான பெண் கதாபாத்திரத்தில் கமல்,
5கா கருப்பனுக்கும்சாலினி சிங்5:06வைரமுத்துமல்லிகா செராவத் இரவு கேளிக்கை விடுதியில் நடனம்
6ஓ...ஓ...சனம்
(மீளிசை)
ஹிமேஷ் ரேஷாமியா, மகாலக்ஷ்மி ஐயர்3:47வைரமுத்துபடத்தில் இடம் பெறாத கூடுதல் பாட்டு
Remove ads

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "இது கமல்ஹாசனின் 'டென் மேன் ஷோ!'... ஒன்றுக்குப் பத்தாக வரும் கமல்களுக்குத் தீனி போடுவதிலேயே பெரும் கவனத்தைச் செலவிட்டதாலோ என்னவோ, கதை லாஜிக்கிலும் திரைக்கதை மேஜிக்கிலும் கிராஃபிக்ஸ் நேர்த்தியிலும் ஆங்காங்கே சறுக்கல்கள். நம்பியின் நடிப்பாளுமை, சமூகப் போராளியான வின்சென்ட் பூவராகனின் புயல் கோபம், பத்து கேரக்டர்களுக்கும் விதவிதமான குரல் மாற்றம் என கமலின் உழைப்பு... சம காலத் தமிழ் சினிமாவின் பிரமிப்பு!" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]

Remove ads

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads