கமல்ஹாசன்

இந்திய அரசியல்வாதி, நடிகர், நடனர், பாடகர், இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கமல்ஹாசன் (Kamal Haasan,[4] பிறப்பு:7 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[5][6][7]

விரைவான உண்மைகள் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் ...

கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.[8] நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.[9] இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[10] அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.[11] 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். துணை நடண ஆசிரியராக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். கன்னியாகுமரி எனும் மலையாள படமே முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார்.

1983 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய தேசிய விருது கிடைத்தது. இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.

1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார்.[12]

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கமல்ஹாசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.[13] தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி.[14] கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர்.[14] கமல்ஹாசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார்.[14] தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார்.[14] தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.[15] ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[14]

Remove ads

அரசியல் பிரவேசம்

கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்.[16] 13 டிசம்பர் 2020 அன்று, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மநீமயின் தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார், 142 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் மற்றும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் இவர் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Remove ads

திரைப்படக் குறிப்பு

இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

நடித்த திரைப்படங்கள்

Films that have not yet been released இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் திரைப்படம், ஆண்டு ...

வெளிவராத படம்

மேலதிகத் தகவல்கள் சபாஷ் நாயுடு ...
Remove ads

தயாரித்த திரைப்படங்கள்

Films that have not yet been released இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

குறிப்பு:கமல்ஹாசன் அவர்களின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் கமல் தயாரித்த மற்றும் தயாரிக்காத பல படங்கள் விநியோகமும் செய்துள்ளது.

வெளியாகாத அல்லது பாதியில் கைவிடப்பட்ட திரைப்படங்கள்

Remove ads

எழுதிய திரைக்கதைகள்

Remove ads

இயக்கிய திரைப்படங்கள்

1: 1997 – மருதநாயகம் (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)
2: 2017 – சபாஷ் நாயுடு (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

( பாடலாசிரியர்)

Remove ads

இதர பங்களிப்புகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

வெளியாகாத திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

Remove ads

விருதுகள்

Thumb
மார்ச் 31, 2014 அன்று புதுடில்லியில் ராகுபிரதி பவனில் உள்ள ஒரு பொதுப்பணித்துறை விழாவில் ஸ்ரீ கமல் ஹாசனுக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
  • மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
  • சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஓர் இந்திய தேசிய விருது.
  • 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்.
  • மூன்று முறை, ஆந்திரா அரசின் நடிப்புக்கான நந்தி விருதுகள். (திரைப்படங்கள் - சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்திருடு சந்திருடு)
  • 19 பிலிம்பேர் விருதுகள்.
  • 50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது.
  • பத்மசிறீ விருது (1990)
  • சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
  • பத்ம பூசன் விருது (2014)[41]
  • தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார்.[42]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads