தச்சுடைய கைமாள்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தச்சுடைய கைமாள்கள் (Thachudaya Kaimals) என்பவர்கள் இப்போது இந்திய மாநிலமான கேரளாவின் திருவிதாங்கூரில் ஆண்ட தலைவர்களின் பரம்பரையாக இருந்தனர். இவர்கள் கேரளாவில் ஒரு புனிதமான பிரமுகராக இருந்தனர். இவர்கள் கூடல்மாணிக்கம் கோயில் [1] மற்றும் அதன் நிலங்களின் ஆன்மீகத் தலைவராகவும் தற்காலிக ஆட்சியாளராகவும் கருதப்படுகிறார்கள்.

இவர்களைப் பற்றி பழங்கால நூலான கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் சட்டரீதியான உரிமைகளைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு தங்களுக்கு முன் விளக்கும் வாளுடனும் தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்துச் செல்ல அனுமதி இருந்தது. ஆட்சித் தலைவருக்கு திருவிதாங்கூர் நாயர் படையணியின் துணை இருந்தது. இவர்களின் குடியிருப்பு இரிஞ்ஞாலகுடாவில் உள்ள கோட்டிலக்கல் அரண்மனையாகும். இவர்களின் வம்சம் மாணிக்கன் கேரளர் என்ற சொற்களைக் கொண்ட சுருள் சங்கு-ஓட்டின் அடையாளத்தை தாங்குகிறது. பண்டைய சட்டத்தின் படியும், வழக்கப்படியும் தச்சுடைய கைமாளுக்கு இந்துக்கள் மீது இறுதி ஆன்மீக அதிகாரம் உண்டு என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி, 1930 களில் இவர்களைச் சந்திக்க இரிஞ்ஞாலக்குடாவிற்கு வருகை புரிந்தார்.
இராச்சியத்தின் ஆட்சி அவ்வப்போது இவர்களுக்கு வழங்கப்பட்டது, குறிப்பாக மன்னனின் மரணத்திற்கும் மற்றொருவர் அரியணை ஏறுவதற்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும்போது. [2]
முன்னதாக, ஒரு தச்சுடைய கைமாளை ஆளும் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கும், திருவிதாங்கூர் மகாராஜாவை இந்து மதத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் ஒரு முயற்சி கொச்சி ராஜாவால் தூண்டப்பட்டது, திருவிதாங்கூரில் கோயில் நுழைவு பிரகடனத்திற்குப் பிறகு அவர் பிரிட்டிசு ராஜ் அதிகாரிகளால் இந்தியத் தலைமை ஆளுநரின் விருப்பத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.[3]
மலபாரின் கோழிக்கோடு நாட்டுக்குச் சொந்தமான குருவாயூர் கோயில், திருவிதாங்கூரின் தச்சுடைய கைமாள் குடும்பத்தின் கூடல்மாணிக்கம் கோயில், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ஆகியவை கேரளாவின் மிகப் பெரிய கோயில்களாகும்.
Remove ads
பரம்பரை உரிமைகளின் முடிவு
1971 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 26 வது திருத்தத்துடன், [4] இந்தியாவில் சுதேச ஒழுங்கு ரத்து செய்யப்பட்டது, இதனால் தச்சுடைய கைமாள்கள் கோயில் மற்றும் அதன் நிலங்களுக்கான உரிமையை இழந்தனர். [5] அந்த சொத்துக்கள் இப்போது மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படும் ஒரு அறக்கட்டளையால் நடத்தப்படுகின்றன.
காயம்குளம் அரச குடும்பத்தின் முண்டநாடு கிளையில் 1895 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் தேதி பிறந்த ஒரு தச்சுடைய கைமாளுக்கு பாஸ்கரன் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர், இவர் திருவனந்தபுரத்தின் வலியசாலையில் வசித்து வந்தார். [6]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads