தஞ்சாவூர் மாநகராட்சி
இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியாகும். மாநிலத்தின் 12-வது மாநகராட்சியாக 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 54 கோடி ரூபாய் ஆகும்.[1][2]
Remove ads
வரலாறு
தஞ்சாவூர் நகராட்சி
தஞ்சாவூர் நகராட்சி மன்றம் கி.பி.1866 மே 9-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1983-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது.
மாநகராட்சியாக தரம் உயர்வு
தஞ்சாவூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த நிலையில், மாநிலத்தின் 12–வது மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தரம் உயர்த்தப்பட்டது[1][3][4]
Remove ads
மாநகராட்சி
மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் 51 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 39 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாஜக 1 வார்டையும், அமமுக 1 வார்டையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் திமுகவின் சண். இராமநாதனும், அஞ்சுகம் பூபதியும் வென்றனர்.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads