தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பாயும் தௌலிகங்கா ஆற்றின் குறுக்கே கட From Wikipedia, the free encyclopedia

Remove ads

தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் (Tapovan Vishnugad Hydropower Plant) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பாயும் தௌலிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை அருகே நிறுவப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் ஆகும். ரெய்னி கிராமத்தில் தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நீர் மின் நிலையம் நாளொன்றுக்கு 520 மெகா வாட் மின் உற்பத்தி கொண்டது. மேலும் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 2.5 கிலோ கிகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது.[1]

விரைவான உண்மைகள் தபோவன் விஷ்ணுகாட் அணை, நாடு ...
Remove ads

2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்

7 பிப்ரவரி 2021 அன்று ஏற்பட்ட 2021 உத்தராகண்ட வெள்ளத்தால் தௌலிகங்கா அணை மற்றும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன், நீர் மின் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.[2][3][4][5][6][7] தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Remove ads

மீட்புப் பணிகள்

தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலைய சுரங்கத்தில் இதுவரை 37 பேர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 168 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. சேறுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் இந்திய இராணுவம், இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படைகளின் 450-க்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 120 மீட்டர் நீளத்திற்கு இடிபாடுகளை அகற்றிவிட்டனர். நேற்று முன்தினம் நீர் மின் நிலைய சுரங்கத்தில் துளையிடும் பணியை தொடங்கினர். ஆனால், தௌலிகங்கா ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து மீட்புப்பணி தொடர்ந்தது. [8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads