தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் விவரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads
Remove ads

தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு[1] அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

  • தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.[2]

ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர்[3]. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர்.

Remove ads

ஊராட்சி மன்றத்தின் பணிகள்

  1. . தெரு விளக்குகள் அமைத்தல்.
  2. . ஊர்ச் சாலைகள் அமைத்தல்
  3. . குடிநீர் வழங்குதல்.
  4. . கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
  5. . சிறிய பாலங்கள் கட்டுதல்.
  6. . கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
  7. . தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
  8. . இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.[4]

கிராம சபை மற்றும் கிராம சபைக் கூட்டம்

ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஆண்டிற்கு நான்கு முறை கூட்டப்படும் கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading content...

வெளிப்புற இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads