தமிழ்ச் சமூகத்தில் கொத்தடிமைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் சூழலில் (தமிழ் நாடு, இலங்கை) சாதி காரணமாகவோ, அல்லது தாழ்ந்த பொருளாதார நிலை காரணமாகவோ ஒரு தனி நபர், குடும்பங்கள், அல்லது சில சாதி குழுக்கள் பிற "உயர்" சாதி அல்லது உயர் பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு காலம் காலமாக வேலை செய்வது கொத்தடிமை எனலாம். அப்படி வேலை செய்பவர்களை கொத்தடிமைகள் எனலாம். பொதுவாக கொத்தடிமைத்தனம் தமிழ் சமூக அமைப்பின் ஒரு உள்ளற கட்டமைப்பே. எஜமானர்களை தவிர்த்து இவர்களுக்கென்று ஒரு தனி வாழ்வோ, அல்லது அப்படிப்பட்ட வாழ்வமைப்பதற்கான சூழ்நிலையோ இல்லை.
அவர்களின் உள் மன சித்திரம் அடிமை வாழ்விற்கு ஒத்துபோவதற்கு ஏற்றவாறு பழகிவிட்டிருக்கின்றது. [சான்று தேவை]
வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், கழிவுகளை அகற்றுதல், வயல் வேலை, கல்லுடைத்தல், கட்டங்கள் கட்டும் வேலை, கைத்தறி போன்ற உடல் உழைப்பு பெரிதும் தேவைப்படும், அல்லது பிறர் செய்ய தயங்கும் வேலைகளை கொத்தடிமைகள் செய்ய பணிக்கப்படுவது வழக்கம். பொதுவாக இவர்களுக்கு உணவுவே பிரதான வேதனம். இவர்கள் ஒதுக்கப்பட்ட வசதிகள் அற்ற வதிவிடங்களில், அல்லது சேரிகளில் வசிப்பார்கள்.
கொத்தடிமைகள் இழி சாதிகளாகவோ அல்லது தீண்டாமை சாதிகளாகவோ கருதப்படும், சமூக படிநிலையில் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் இருந்து வருகின்றார்கள், அல்லது அச்சமூகங்களே அப்படி இருக்கின்றன.
கொத்தடிமைகள் வைத்திருப்பது மன்னர், காலனித்துவ ஆட்சிகளின் கீழ் வழமையாக இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவிலோ, இலங்கையிலோ கொத்தடிமை வைத்திருப்பது ஒரு குற்றமுள்ள செயல். எனினும் இன்னும் கொத்தடிமைகள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.
கொத்தடிமைகளை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்பவர்களில் இருந்து வேறுபடுத்தி காண வேண்டும். பொதுவாக கூலி வேலை செய்பவர்களுக்கு எந்நேரத்திலும் வேலையிலிருந்து விலக சுதந்திரம் இருக்கும், ஆனால் கொத்தடிமைகளுக்கு அந்த சுதந்திரம் இருக்காது.
ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக அல்லது கொத்தடிமைகள் போன்று வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்களையும், முழுமையாக கொத்தடிமைகளாகக் கொள்ள முடியாது.
Remove ads
சான்றுகள்
தமிழ் வேளாண்மை வரலாற்று எண்ணிம ஆவணகத்தின் (1650 – 1950) பதிவுகள் (EAP458: Constituting a digital archive of Tamil agrarian history during the colonial period) தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை பரவலாக இருந்ததற்கான பல சான்றுகளைக் கொண்டு இருக்கின்றது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads