கைத்தறி நெசவு

From Wikipedia, the free encyclopedia

கைத்தறி நெசவு
Remove ads

கைத்தறி நெசவு (Hand-Loom Weaving) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குகின்ற ஒரு தொழிலாகும். தமிழ்நாட்டில் சில ஊர்களில் முதன்மை தொழிலாகவும், பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக விளங்குகின்றது.

Thumb
கைத்தறி நெசவு

தறி

தறி என்பது ஆடை தயாரிக்க பயன்படும் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கருவியாகும்.

சேலம், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல்

சேலம், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களில் இருந்து ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

உலகம் முழுவதும் ஏற்றுமதி

ஈரோட்டிலிருந்து நெசவுத் துணிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தென் தமிழகத்தில் வா(மா)திரியார்களின் பாய்மரத்துணி நெசவு

தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள், "காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும், பருத்தி ஆடைகளை செய்துவரும் தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் வா(மா)திரியார் என்கின்ற நெசவு மக்களை பற்றிப் பெரும்பாலும் செய்திகள் குறிப்பிடப்படுவதில்லை." எனத் தனது பதிவினைச் செய்கிறார்.

பின்புலம்: தஞ்சை கோ.கண்ணன் தன் வரலாற்றாய்வில் தமிழ்க் கடலோடிகள் பற்றி குறிப்பிடும்போது, தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள் கூறுவதின் அடிப்படை அயலகத் தரவுகளின் படி சரியானதே என்பதை உறுதிப்படுத்துகிறார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்க் கடலோடிகள் சீனா, ரோமாபுரி, கிரேக்கம், அரபு ஆகிய நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தனர் என்ற பதிவுகள், சீனத்திலும், அரபியரிடமும், ரோம, கிரேக்க புவி இயலாளர்களிடமும் குறிப்புகள் உள்ளன. இவை போன்ற அயலகச் சான்றுகள் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து 13 -ஆம் நூற்றாண்டுவரை தமிழர்களின் / தமிழ்க் கடலோடிகளின் / தமிழ் வணிகர்களின் கடல் மேலாண்மையைப் பறை சாற்றின. 13 -ஆம் நூற்றண்டிற்குப் பிறகுதான் சீனர்கள் கடல் வழி வாணிகம் செய்தமை பற்றிய தகவல்கள் உள . ஆயின் நம் பழந்தமிழ்க் கடலோடிகளுக்கு மாகடலில் பயணம் செய்ய மரக்கலங்கள் செய்து, பராமரித்திருக்க தொழில்நுட்பமிகு மரக்கலம் செய்வோரும், அதற்கு இணையாக துணைத் தொழில்கள் இருந்திருக்க வேண்டும், என்றும் வரலாற்றாய்வர் தஞ்சை கோ.கண்ணன் அவர்கள் தன் வரலாற்றாய்வில் குறிப்பிடுகிறார். [1]

இதன் தொடர்ச்சியாக, இந்த இடைவெளித் தரவினைத் தர அணியமாய் நம்முன்னே இருப்பவர்தான் தன்முனைப்பான மாகடல்/ தமிழ்நிலத் தொன்மை பற்றிய ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள். அவர் தன் ஆய்வுகளில் தென் தமிழகத்தில் இன்றும் வாழும் ஓடாவியர் என்ற பிரிவினர் பெரும் மரக்கலங்கள் கட்டியவர்கள் என்ற தகவலையும், வா(மா)திரியார்கள் என்பவர்கள் காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும் ,பருத்தி ஆடைகளை செய்துவருபவர்கள் என்ற தகவலையும் நம்முன் வைக்கிறார். ஆக நம் பழந்தமிழ்க் கடலோடிகளுக்குப் பாய்மரத் துணி, கடற்பயணம் செய்ய கூடாரத்துணி, செய்து கொடுத்தோரே தென் தமிழகத்தில் இன்றும் வாழும் வா(மா)திரியார்கள் என்ற முடிவிற்கு நாம் வர முடிகிறது.</ref>

Remove ads

காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு

காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி

காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்' என்பதாகும். இதன் அர்த்தம் --- காஞ்சீபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, பணம் சம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும்.

கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன் படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே என்பதன் அர்த்தமாகும்.

ஆரணி பட்டு - ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும். இந்த பட்டு நெசவு ஆரணி நகர்ப்பகுதிகளிலும் மற்றும் ஆரணி தாலுகா பகுதிகளில் அதிகம் நெசவு செய்யப்படுகிறது. அதனால் ஆரணி பட்டு பிரசித்தி பெற்றதாகும்.

கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்

கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். சங்கரன்கோவில், ஆண்டிபட்டி, எட்டயபுரம், பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம், திருவில்லிபுத்தூர், நெகமம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம், [சாயர்புரம் - செந்தியம்பலம்] ஆகியவையாகும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது சிறுமுகை. கோரப்பட்டிற்கும், மென்பட்டிற்கும் பெயர் போன பகுதி இது. மாதத்திற்கு தோராயமாக ரூ. 50 கோடி பணப்புழக்கம் கொண்ட இந்த பகுதியில் நெய்யப்படும் கைத்தறி பட்டு மற்றும் காட்டன் புடவைகளுக்கு கோவை மற்றும் இதர கொங்கு பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

Remove ads

நெசவு சார்ந்த, தொழில்கள்

கோவை நகரம் நெசவு சார்ந்த, தொழில்களில் முன்னணி வகிக்கும் நகரமாகும். கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

திருப்பூர் ஆசியாவிலேயே மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையமாகவிளங்குகிறது.

சின்ன தறிப்பேட்டை --- சிந்தாரிப்பேட்டை

தறி கொண்டு கைத்தறி நெசவு தொழில் செய்துவந்த பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) ஆகும். அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாரிப் பேட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிந்தாரிப்பேட்டை- சென்னையின் மையப்பகுதியாகும்.

இவற்றையும் காணவும்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads