தமிழ்த் தேசியக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்த் தேசியக் கட்சி (Tamil National Party) 1961–1964 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இது 1961இல் ஈ. வெ. கி. சம்பத்தால் தொடங்கப்பட்டது. 1949இல் கா. ந. அண்ணாதுரை, தி.க.விலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தொடங்கிய போது, சம்பத் அவருடன் இணைந்து கொண்டார்.[1] அடுத்த பன்னிரெண்டாண்டுகள் திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். பின்னர் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து பிரிந்து சென்றார். 1961 ஏப்ரல் 19 ஆம் நாள் தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.[2] கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன், கோவை செழியன் ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள் ஆவர். 1962 சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோல்வியடைந்தது. 1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[3][4][5][6]
1995ல் கோவை செழியன் நிறுவனராக தணிக்கையாளர் பாலசுப்ரமணியம் பொதுச்செயலாளராக மீண்டும் இக்கட்சியை துவக்கினர்.
2018ஆம் ஆண்டு தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம் மறைவிற்கு பிறகு ஏப்ரல் 17 2025 முதல் மண், மொழி, இனம் சார்ந்த அரசியலை முன்னெடுத்து கு.தமிழரசன் தலைமையில் தமிழ் தேசியக் கட்சி இயங்கி வருகிறது.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads