தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழர் கண்ணோட்டம் என்னும் திங்கள் இதழ் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவருகிறது. தமிழ்த் தேசிய அரசியல் இவ்விதழின் பாடுபொருளாக இருக்கிறது.
Remove ads
தொடக்கம்
இந்த இதழ் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 வரை தமிழர் கண்ணோட்டம் என்ற பெயரில் வந்த இந்த இதழ் 2012ஆம் ஆண்டு முதல் மாதமிருமுறை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்னும் பெயரில் வெளிவருகிறது.2020 ஆம் ஆண்டு மார்சு முதல் மாத இதழாக வருகிறது. 2003 முதல் 2019 வரை வெளியிடப்பட்ட இதழ்கள் அனைத்தும் வலைபூவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[1] ஆகஸ்டு 2009 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் கீற்று இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன[2]
Remove ads
நோக்கம்
தமிழ் இன நலன் காக்கும் தமிழ்த் தேசக் குடியரசை உருவாக்க வேண்டும் என்னும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துவதோடு, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைச் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் நோக்கம் ஆகும்.
ஆசிரியர் குழு
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழுக்கு,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்[3] ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் இணை ஆசிரியராகவும், க.அருணபாரதி, கதிர்நிலவன்,கவிபாஸ்கர்,அ. ஆனந்தன்,நா.இராசாரகுநாதன்,நா. வைகறை,ப. செம்பரிதி ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads