தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, [1] தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறையின் கீழ் மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் வருகிறது.

இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் செயல்படுகிறது.[2]

Remove ads

வளர்ச்சித் திட்டங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பொறுப்பில் தற்பொழுது உள்ள வளர்ச்சித் திட்டங்களின் பட்டியல் (முழுமையானதல்ல).

மைய அரசின் திட்டங்கள்

மாநில அரசின் திட்டங்கள்

  • தமிழகக் கிராம குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் அப்படி என்றால் என்ன
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடுத் திட்டம்
  • கிராம தன்னிறைவுத் திட்டம்
  • சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads