மாவட்ட ஊராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவட்ட ஊராட்சி (District Panchayat) என்பது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாவட்ட அளவில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ஆகும். உள்ளாட்சி அமைப்புகளில் இது மூன்றாம்படியில் உள்ளது. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Remove ads
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர்த்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[1]
Remove ads
மாவட்ட ஊராட்சியின் கடமைகள்:
- மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், சாலை மேம்பாடு குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் கடமையாகும்.
- மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்றவையும் இதன் கடமைகள் ஆகும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
- மாவட்ட ஆட்சித் தலைவரே மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஆவார். அவருக்கு உதவிட மாவட்ட உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட உதவி இயக்குநர்கள் பணிகளை மேற்கொள்வர்.
- மாவட்டம் முழுவதற்கும் ஒரு வரைவு வளர்ச்சித் திட்டத்தை தயாரிப்பது இதன் பணி ஆகும்.
- இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
- அம்மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக்குழுவின் கடமை ஆகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads