தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையமாகும். தமிழ் நாட்டில் விளையாட்டினையும் உடல் தகுதியினையும் மேம்படுத்தவும் அரசு, விளையாட்டுச் சங்கங்கள் இதர விளையாட்டு அமைப்புகளின் வளங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]
Remove ads
வரலாறு
விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் ஆகிய இரண்டையும் இணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அமைப்பு 1992 ஜூலை 18 அன்று உருவாக்கப்பட்டது.[3]
நோக்கங்கள்
- திறமை கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல்
- மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளைஞர்களைத் தயார் செய்தல்
- போட்டிச் சூழலை உருவாக்கி உடல் தகுதியை மேம்படுத்தல், திறமைசாலிகளை அடையாளம் காணல், போட்டித்திறனை வளர்த்தல்
- விளையாட்டிற்கேற்ற உள்கட்டமைப்பை அமைத்து அனைத்து நிலை போட்டிகளுக்கும் தயார் செய்தல்
- வீரர்களுக்கான நவீன நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்க உரிய பயிற்சி, பயிலரங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அமைத்தல்
Remove ads
செயல்பாடுகள்
- ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சியாளரை நியமித்து இலவசப் பயிற்சி அளிக்கிறது.
- விளையாட்டுப் பள்ளிகள்,விடுதிகள் போன்றவற்றை நடத்துகிறது.
- இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடற்திறனாய்வுகளை நடத்திப் பயிற்சி முகாம்களை நடத்துகிறது
- அண்ணா பிறாந்தநாளில் சைக்கிள் போட்டி நடத்துகிறது.
- முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளாவிலான போட்டிகளை நடத்துகிறது
- தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads