தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர்.

மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவிட இலக்கண மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட நூல்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருவோர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்களை ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக இல்லாமலும் போகக் கூடும்.

இந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல. சங்க காலத்திலும், அதன் பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் மொழியில் ஏற்பட்ட மாறுதல்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனது ஒரு புறம் இருக்கப் பா வடிவில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களை விரிவாக விளக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டதனால் பிற்காலங்களில் இவற்றுக்குப் பல உரை நூல்கள் எழுந்தன

இதனால் காலத்துக்குக் காலம் இத்தகைய நூல்களுக்கு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைகள் எழுதப்படுவதும், மேலும் காலம் செல்ல அந்த உரைகளே புரிந்து கொள்ளப்படாது போகப் புதிய உரைகள் எழுதப்படுவது வழக்கமாக நிகழ்வதே. பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் உரைகள் மேலோங்கிய காலம் எனலாம். இவ்வாறு வளர்ந்த இவ்வுரைகள் எழுதிய உரையாசிரியர்களின் காலம் பொ.ஊ. 12 முதல் 18-ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.

Remove ads

உரையாசிரியர்கள் கையாண்ட உத்திகள்

உரையாசிரியர்கள் வெறும் சொற்பொருள் விளக்கம் தருவதோடு நின்று விடாமல் இலக்கணக் குறிப்புத் தருதல், எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குதல், திறனாய்வு முறையில் விளக்குதல், வினாவிடை முறையில் விளக்குதல், எதனையும் வரிசை முறைப்படியும் ஒழுங்கு முறையிலும் எழுதுதல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு விளக்கம் செய்வர். இவ்வுரையாசிரியர்களின் நடை 'விளக்க நடை' என்று கூறப்படுகின்றது. சிலபோழ்துகளில் மூல நூலை விட உரைநூல் சிறப்பாக அமைவதும் உண்டு.

இவ்வாறான உரை நூல்களை எழுதிய உரை ஆசிரியர்களை

  • இலக்கண உரையாசிரியர்கள்
  • இலக்கிய உரையாசிரியர்கள்
  • வைணவ உரையாசிரியர்கள்
  • சைவ சித்தாந்த உரையாசிரியர்கள் எனப் பகுத்துக் காண்பர்.
Remove ads

இலக்கண உரையாசிரியர்கள்

இலக்கண நூல்களுக்கு உரை எழுதியோர் இலக்கண உரையாசிரியர்கள் ஆவர்.

இலக்கிய உரையாசிரியர்கள்

வைணவ உரையாசிரியர்கள்

சைவ சித்தாந்த உரையாசிரியர்கள்

உரையாசிரியர்களின் பட்டியல்

  • இந்தப் பட்டியல் நூலை மையமாகக் கொண்டது.
மேலதிகத் தகவல்கள் உரையாசிரியர், உரை எழுதிய நூல்கள் ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads