தமிழ் கலப்பிசை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூலப் பாடலின் வரிகள், தாளம், காட்சியமைப்பு, இசைக்கோர்ப்பு போன்றவற்றை மாற்றி மீள இசையமைத்து வெளியிடப்படுவது கலப்பிசை எனப்படும். ஒரு பாடலை வேறு ஒரு பின்னணி இசையில் தருவது, பழைய பாடல்களை புதிய மாதிரி மாற்றியமைப்பது, வெவ்வேறு பாடல்களை கலந்து ஒரு புதுப் பாடலை ஆக்குவது, பாடல்களின் சில கூறுகளை நீக்கியோ சேர்த்தோ பல்வேறு வழிகளில் ஒரு பாடலை மாற்றியமைக்கலாம்.


தமிழ்ப் பாடல்கள் இவ்வாறு மூலப்பாடல்களில் இருந்து மாற்றியமைக்கப்படும் பொழுது அதை தமிழ் கலப்பிசை எனலாம். கலப்பிசை என்பது ஆங்கில சொல்லான Remix Music இணையாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. சிலர் கலப்பிசை என்பதை Fusion Music இணையாக தமிழில் குறிப்பர். Fusion Music தமிழில் இயைபிசை எனலாம்.


அண்மைக் காலமாக கலப்பிசைப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. திரையிசையும் கலப்பிசைப் பாடல்களை பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக Yogi B யால் கலப்பு செய்யப்பட்ட எங்கேயும் எப்போதும் பாடல் பொல்லாதவன் படத்தில் இடம்பெற்றது.


Remove ads

கலப்புப் பண்பாடு

சில வேளைகளில் கலப்பிசை காப்புரிமை மீறலாக மூலப்பாடல் ஆக்கர்களால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. ஆனால், பண்பாடே பல்வேறு கூறுகளின் ஒரு கலப்பு தான்; அந்தப் பண்பாட்டின் சூழலில் இருந்து எழும் ஆக்கங்களைப் பயன்படுத்தி மேலும் புதிய ஆக்கங்களைச் செய்வது பண்பாட்டு வளர்ச்சிக்கு அவசியம் என பலரால் முன்வைக்கப்படுகிறது. இது en:Remix Culture, en:Permission culture, Free Culture என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. தமிழில் இதை கலப்புப் பண்பாடு எனலாம்.

Remove ads

பாடல்கள்

  • வரவு எட்டனா, செலவு பத்தடா -
  • வரான் வரான் பூச்சாண்டி, ரயிலு வணிடில -
  • என்னன்றே, நீ என்னன்றே, வன்னிக்காட்டு வரிசைப் புலி அண்ணேன்ற -
  • சீன தமிழ் கலப்பிசை - Chinese With Tamil Remix by Dj sara -
  • வாராயோ வென்னிலாவே - கிப் கொப் கலப்பிசை -
  • ஒ இளமை -
  • தெலுங்கு, தமிழ், இந்தி கலப்பு -
  • என்னடி ராக்கம்மா


.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads