தமிழ் வளர்ச்சிக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

தமிழ் வளர்ச்சிக் கழகம்
Remove ads

தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது.[1] இவ்வமைப்பின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2025 இல் தமிழ்நாடு அரசு 2.15 கோடி வழங்கியது.[2]

விரைவான உண்மைகள் நிறுவுகை, நிறுவனர்(கள்) ...
Remove ads

குறிக்கோள்கள்

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு:

  1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல்.
  2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல்.
  3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல்.

நிர்வாகக் குழு

இதன் தலைவராக ம. இராசேந்திரன், துணைத்தலைவராக கிருஷ்ண சந்த் சோடியா, துணைத்தலைவர் மற்றும் பொருளாளராக வ. ஜெயதேவன், செயலாளர்களாக உலகநாயகி பழனி, நல்லூர் சா.சரவணன், பதிப்பாசிரியராக பெ.அர்த்தநாரீசுவரன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். அறங்காவல் குழுவில் ப. சிதம்பரம், நல்லி குப்புசாமி, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.[3] இக்கழகத்தின் தலைவராக 2024 அக்டோபர் 24 ஆம் நாள் முதல் ம. இராசேந்திரன் பொறுப்புவகிக்கிறார்.[4]

முன்னாள் தலைவர்கள்

இந்த அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள்.[5]

  1. பெரியசாமி தூரன்
  2. சி. சுப்பிரமணியம் 08-12-1982 முதல் 10.03.1990 வரை
  3. வா. செ. குழந்தைசாமி 10.03.1990 முதல்
Remove ads

தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads