ம. இராசேந்திரன்

From Wikipedia, the free encyclopedia

ம. இராசேந்திரன்
Remove ads

ம. இராசேந்திரன் (M. Rajendran) என அறியப்படும் மகாதேவன் இராசேந்திரன் (பிறப்பு - 3 மார்ச்சு 1951) தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார்.

விரைவான உண்மைகள் ம. இராசேந்திரன், 9-ஆம் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ...

இவர் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக வினையாற்றினார். 2022ஆம் ஆண்டு சனவரியில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகச் சட்டம், விதிகள் திருத்த உயர்நிலைக் குழுவிற்குத் தலைவராக இருந்தார். தற்போது தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவராக இருக்கிறார்.

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் விருது, 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது[1] ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Remove ads

பிறப்பு

ம. இராசேந்திரனுக்கு திருவாரூர் மாவட்டம் குடவாயில் சொந்த ஊர் ஆகும். தவிலிசைக் கலைஞர் மகாதேவனுக்கும் ஞானம்பாளுக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இடங்காண்கோட்டை கீழையூர்[2] என்னும் எடகீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்காண்கோட்டை அன்னவாசல் என்னும் எட அன்னவாசல் என்னும் சிற்றூரில் இராசேந்திரன் பிறந்தார்.[3]

கல்வி

ம. இராசேந்திரன் பிறந்த ஓராண்டிற்குள்ளேயே அவர் தந்தை காலமாகிவிட்டார். அதனால் அவர் தன் தாய்மாமன் சு. நடேசன் ஆதரவில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார்.

  • தொடக்கக்கல்வியை (1-5 வகுப்புகள்) எட அன்னவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பெற்றார்.
  • நடுநிலைக்கல்வியையும் (6-8 வகுப்புகள்) உயர்நிலைக்கல்வியையும் (9-11 வகுப்புகள்) எடமேலையூரில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றார்.[4]
  • புலவர் பட்டத்தை திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று பெற்றார். அங்கு தி. வே. கோபாலையர் கல்லூரி முதல்வராகவும் இவருக்கு ஆசிரியராகவும் இருந்தார்.[3]
  • தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை (Master of Arts) சென்னையிலுள்ள, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.
  • ஆய்வியல் நிறைஞர் (Master of Philosophy ) பட்டத்தை, சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் முனைவர் நா. செயப்பிரகாசம் வழிகாட்டலில் "ரா.சீ.யின் நாவல்கள் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[5]
  • முனைவர் (Doctorate) பட்டத்தை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி வழிகாட்டலில் காலின் மெக்கன்சி (1754-1821) சேகரித்த சுவடிகளைப்பற்றி "மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள்" [6] என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1984ஆம் ஆண்டு பெற்றார்.[7]
Remove ads

பணி

இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்[8]:

  1. தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.[9]
  2. தலைவர், தமிழ்நாடு பொதுநூலகச் சட்டத்திருத்த உயர்நிலைக்குழு;[10] 31-01-2022 முதல் [11]
  3. துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். - 19.6.2008 ஆம் நாள் முதல் 18.6.2011 ஆம் நாள் வரை.[12][13]
  4. மதிப்புறு இயக்குநர், திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம். 2009 - 2011[14]
  5. கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் (Coordinator of the academic committee), உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, 2009 - 2010[15]
  6. இயக்குநர் (பொறுப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. – சூன் 2006 முதல் சூன் 2008 வரை [16]
  7. இயக்குநர் (பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம். 2008
  8. தனி அலுவலர் (பொறுப்பு), குறள்பீடம் - 2001-2003
  9. இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை. – (1.4.1999 முதல் 17.6.2008 வரை)[17]
  10. இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, சென்னை. 1996 - 1999
  11. துணை-இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, சென்னை. 1993 - 1996
  12. ஆய்வுப்பணி தனிஅலுவலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – இரண்டாண்டுகள்
  13. சிறப்புத்தகைமை விரிவுரையாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். - 1986 - 1989 [7]
  14. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி (மாலைநேரம்), சென்னை. 1980-81
  15. தமிழாய்வாளர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகம், சென்னை. 1974 முதல் 1986.[7]

மேலும் சென்னை கோடம்பக்கத்திலிருந்த காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரி, சென்னை பவழக்காரத் தெருவிலிருந்த திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஆகியவற்றில் மதிப்பூதியம் பெறாத தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.[18]

இடம்பெற்ற குழுக்கள்

இராசேந்திரனை தமிழ்நாடு அரசு பின்வரும் வல்லுநர் குழுக்களில் இடம்பெறச் செய்தது:

  1. உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2021 [19] ,[20]
  2. உறுப்பினர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2022 [21][22]
  3. உறுப்பினர், திராவிடக் களஞ்சியக் குழு, 2022[23]

விருதுகள்

இராசேந்திரனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டு அரசு பின்வரும் விருதுகளை அவருக்கு வழங்கியுள்ளது:

  1. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2020; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.[24][25]
  2. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2021; தமிழ்வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை [26][27]

படைப்புகள்

நூல்கள்

மேலதிகத் தகவல்கள் வ.எண், வெளியான ஆண்டு ...

ஆவணப்படங்கள்

  1. பூம்புகார், ஆவணக் குறும்படம் சென்னைத் தொலைக்காட்சிக்காக
  2. திரையில் தமிழ் ஆவணக் குறும்படம், சென்னைத் தொலைக்காட்சிக்காக

மொழிபெயர்ப்புகள்

இவரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பின்வரும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன:

  1. Memory Mist; 2016 Dec 23;Pustaka Digital Media [30]
  2. TRIO Modern Tamil Stories; 2002; Writer's Workshop, Calcutta.
Remove ads

பதிப்பித்தவை

மேலதிகத் தகவல்கள் வ.எண், வெளியான ஆண்டு ...
Remove ads

பதிப்பித்த இதழ்கள்

  1. வெளியீட்டாளர், கணையாழி, 1995ஆம் ஆண்டு முதல்
  2. Editor, Journal of Tamil studies, 2006-2008, International Institute of Tamil Studies, Chennai.

குடும்பம்

ம. இராசேந்திரனுடன் உடன்பிறந்தவர்கள் இரு பெண்கள். இவர் மைதிலி என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு தென்றல், எழில் என்னும் இரு பெண்மக்களும் மேகனா, கெவின், தில்லானா என்னும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads