தர்வாசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்வாசா (Derweze அல்லது Darvaza, பொருள்: கதவு) துருக்மேனிஸ்தான் நாட்டின் காராகும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம் ஆகும். இது துருக்மேனிஸ்தான் தலைநகர் அசுகாபாதுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குடி பெயர்ந்துள்ளனர்.
Remove ads
எண்ணெய்க் கிணறு

இங்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்த சோவியத் புவியியல் நிபுணர்கள், 1971 ஆம் ஆண்டு துளைக்க துவங்கினர்.[1] அப்போது நிலம் தகர்ந்து விழுந்ததில், 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சு வாயு பரவாமல் தடுக்க திட்டமிட்ட அறிவியலாளர்கள், அந்த துவாரத்தில் தீ வைக்க முடிவெடுத்தனர்.[2] சில நாட்களில் எரிவாயு தீர்ந்து தீ சுடர் அணையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை தீ சுவாலை எரிந்து கொண்டிருக்கிறது.[3]
உள்ளூர் வாசிகள் இதை நரகத்தின் கதவு என குறிப்பிடுகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads