தலேர் மெகந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலேர் சிங் (Daler Singh) பரவலாக மேடைப் பெயர், "தலேர் மெகந்தி" (பிறப்பு 18 ஆகத்து 1967) இந்திய இசைப்பதிவுக் கலைஞர், இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக பரவியிருந்த இந்தித் திரைப்பட இசைக்கு மாற்றாக திரையிசை இல்லா இசைவகையை பரப்பியதற்கும் புகழ்பெற்றவர். தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார்.[1] இவரது தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன.[2]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads